ஈரான் நாட்டை பிறப்பிடமாய் கொண்ட பாதாம் பருப்பு யுனைடெட் ஸ்டேட்ஸ், ஸ்பெயின், துருக்கி, இத்தாலி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அதிகம் விளைகின்றன. ஆண்களின் ஆண்மை வளத்தை அதிகரிப்பதிலிருந்து பல வித நோய்களையும் குணமாக்கும் இந்த பாதாம் பருப்பு சக்கரை நோய்யையும் குணப்படுத்தும் வல்லமையும் கொண்டது என ஆராச்சி மூலம் அறியப்பட்டுள்ளது.
உடம்பிற்கு சத்தை கொடுக்கும் என்று தினமும் பாதாம் சாப்பிடுபவர்கள் பலரும் உண்டு ஆனால் இது நீரழிவு நோய்களை தடுக்கும் அமிர்தம் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தினமும் ஒன்றல்லது இரண்டு பாதாம் பருப்புகளை ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் பாதாம் இன்சுலின் சுரப்பு அதிகரித்து டைப் 2 சக்கரை நோய்கயை தடுத்துவிடுமாம்.
மேலும் நீரழிவு நோய்களை உண்டாக்க உதவிகரமாக இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து விடுவது மட்டுமின்றி அதில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் இருப்பதால் இன்சுலின் சுரப்பை சீராக்கி பல நீரழிவு நோய்களிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது. போட்டிகளை கொண்ட இந்த உலகில் நீண்ட நேரம் உழைக்கவும் உதவிகரமாக உள்ளது.
பாதாம் பருப்பு மட்டுமின்றி அணைத்து வகையான கொட்டை பருப்புகளும் நீரழிவு நோய்க்கு எதிராக செயல் படும் என ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பாதாமில் அதிகப்படியான கார்போஹைட்ரெட்ஸ் ப்ரோடீன் விடமின்ஸ் மினெரல்ஸ் நல்ல வகையான கொழுப்புகள் மற்றும் இதர சத்துகள் இருப்பதால் தினமொரு பாதம் சாப்பிடுவது வரவேற்கத்தக்கது.