Suchitra Husband

பிக் பாஸ் தமிழ் சின்னத் திரை நிகழ்ச்சியானது பல மார்க்கெட் இழந்த பிரபலங்களுக்கும் மறுவாழ்வு தரும் நிகழ்ச்சியாக அமைந்து வருகின்றது. அதே இந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 4 யில் பங்கேற்றுள்ள 18 போட்டியாளர்களின் ஒருவரான சுசித்ராவின் உண்மை வாழ்க்கையை பற்றின உண்மைகள் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் சுசித்ராவின் கணவரை கண்டு ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.

தொகுப்பாளர் மற்றும் பாடகரான சுசித்ராவை யாராலும் மாறக்கவே முடியாது. காரணம் சுசி லீக்ஸ் என்ற பெயரில் சினிமா பிரபலங்களின் அந்தரங்க விடீயோக்கள் இவரது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் பிரபலமானது. அதன் மூலம் ட்ரெண்டான சுசி தன் சமூக வலைத்தள பக்கம் ஹேக் செய்யப்பட்டதாகவும் யாரோ அவர் அனுமதியின்றி இந்த புகைப்படங்கள் வெளிவந்ததாகவும் கூறி தப்பித்தார்.

suchithra

சுசி லீக்ஸ் வெளிவந்த வேளையில் சுசியின் கணவர் கார்த்திக் தன் மனைவிக்கு மன நிலை சரியில்லை என்றதால் தான் இப்படி செய்கிறார் என்று கூறியிருந்தார். அதிலிருந்தே சுசிக்கும் கார்த்திக்கும் ஏற்பட்ட மானஸ்தம்பத்தால் விவாகரத்து பெற்றனர். அதன் பின் தனியாக வாழ்ந்து வந்த சுசி தற்பொழுது பிக் பாஸ்ஸில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

சுசியின் முன்னாள் கணவர் கார்த்திக் தனுஷ் நடித்த யாரடி நீ மோஹினி திரைப்படத்தில் நயன்தாராவுக்கு முறை மாமனாக நடித்த கார்த்திக் அவர்கள் தான் என்ற செய்தி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. கார்த்திக் குணச்சித்திர கதாபாத்திரங்களில் அதிகம் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!

Suchithra and karthik Suchithra and karthik

விவாகரத்து ஆகி பல ஆண்டுகள் ஆன பின்னரும் இன்ஸ்டாகிராமில் ஆன்லைன் வந்த கார்த்திக் அவர்களை ஒருவர் சுசித்ராவை கேட்டபொழுது அதற்கு அவர் “என் முன்னாள் மனைவி நான் மிகவும் நினைக்கும் மற்றும் மிகவும் பிடித்த ஒருவர்.அவளைப் பற்றி எல்லாம் தெரியும் என்று நினைக்கும் உங்களுக்கு உண்மையில் அவளை பற்றி முழுதாக எதுவும் தெரிவில்லை” என்று கூறி தன் மனைவியை நெகிழ்ந்துள்ளார். இந்த பதிவு ரசிகர்களின் மனதை வென்றுள்ளது.

Karthik Suchithra Husband Karthik

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here