தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கலக்கி வரும் ஷார்ஜா குடும்பத்தை சேர்ந்த அர்ஜுன் தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்து ஆக்சன் கிங் அர்ஜுன் என்ற பட்டத்தையும் பெற்றார். நிவேதிதா என்ற கன்னட நடிகையை 1988-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகர் அர்ஜுனிற்கு ஐஸ்வர்யா அஞ்சன என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.
அர்ஜுன் ஷார்ஜாவில் மூத்த மகளான ஐஸ்வர்யா 2013-ம் ஆண்டு பூபதி பாண்டியன் இயக்கத்தில் மைகேல் ராயப்பன் தயாரிப்பில் விஷால் நடிப்பில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். சந்தானம் காமெடியில் கலக்கிய இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யாவிற்கு ஒரு அளவிற்கு வெற்றி கிடைத்தாலும் அவருக்கு அடுத்தடுத்து படங்கள் தரும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதன் பின் 5 ஆண்டுகள் கழித்து தமிழ் மற்றும் கன்னட மொழியில் உருவான சொல்லிவிடவா என்ற திரைப்படத்தில் நடித்த ஐஸ்வர்யாவிற்கு அதும் சரியாக ஓடாமல் ஏமாற்றத்தையே கொடுத்தது. அத்திரைப்படம் ஐஸ்வர்யாவின் தந்தை அர்ஜுன் இயக்கி தயாரித்து 2018-ம் ஆண்டு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் மார்க்கெட் இல்லாததால் குடும்ப தொழில் ஒன்றை பார்த்து வரும் ஐஸ்வர்யா ரசிகர்களின் மத்தியில் தன பிரபலம் குறைந்திடாமல் இருக்க சமூக வலைத்தள பக்கம் ஒன்றை ஆரம்பித்து அதில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அப்படி இரண்டு நாட்களுக்கு முன்பு பச்சை நிற சேலையில் ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகின்றது. அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!
View this post on Instagram