தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டிற்கு அருகிலுள்ள ஏலக்குண்டூர் கிராமத்தின் சுற்றுவட்டாரத்தில் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் குட்டி யானை ஒன்று நேற்று , மதியம் 4 மணியளவில் தவறி விழுந்தது. யானையின் பிளிறல் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனே வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த வந்த துறையினர் சம்பவ இடத்திற்கு உடனே வந்து யானையையும் மீட்கும் பணியில் செயல்பட்டு வந்த வந்த வனத்துறையினர் யானையை 50 அடி ஆழத்தில் இருந்து மீட்டெடுப்பது சற்று கடினமாக இருந்தது. முதல் 20 அடி அகலமாகவும் அடுத்த 30 அடி குறுகி இருந்ததாலும் சவாலாக இருந்த வனத்துறையினருக்கு மேலும் பயத்தில் இருந்த யானை மீட்டெடுப்பது குழப்பத்தை ஏற்படுத்தியது.
ஆதலால் 15 மணி நேரத்திற்கும் மேல் போராடிய வனத்துறையினர் கூடியிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உதவியுடன் கிரேன் மூலம் குட்டி யானையை மீட்டெடுத்துள்ளனர். மேலும் உயிருடன் இருந்ததால் துறுதுறுவென செயல்பட்ட யானை கயிற்றில் சிக்காமல் நழுவிக் கொண்டே இருந்ததால் அதற்கு 2 மயக்க மருந்து கொடுக்கப்பட்ட மீட்டனர்.
இந்த சம்பவம் தமிழ் நாடெங்கும் பரவிய நிலையில் யானையை மீட்டெடுத்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு மக்கள் மிகுந்த பாராட்டுகளை கொடுத்து வருகின்றனர். மேலும் ஒத்துழைச்ச தருமபுரி பொதுமக்களுக்கும் இளைஞர்களுக்கும் காவல் துறை சார்பாக நன்றி தெரிவித்து வருகின்றனர். யானையை மீட்டெடுத்த காட்சி உங்களுக்காக!
மீட்கப்பட்ட யானை அருகில் உள்ள வனத்தில் விடப்பட்டு தொடர்ந்து ம் மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.