Couples Outdoor Photoshoot

உணவு பழக்க வழக்கம் வாழ்கை முறை தொழில் போன்ற எக்கச்சக்கமான வாழ்வியல் வகுத்தலை இந்தியா அமெரிக்கா போன்ற முன்னணி நாடுகளிடமிருந்து கற்று கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது நாகரியத்துக்கு பழக்கப்பட்டு வருகின்றது. அதன் விளைவாக தற்பொழுது சமீபத்தில் திருமணமா இளம் ஜோடிகள் வெளியிட்டுள்ள அவுட்டோர் போட்டோஷூட் ட்ரெண்டாகி வருகின்றது.

நம் முந்தைய காலங்களில் திருமணம் செய்யப்போகும் பெண்ணை கூட மாப்பிள்ளையின் கண்களில் காட்ட மாட்டார்கள் பொத்தி பொத்தி வைத்து திருமணம் முடிந்த முதலிரவின் பொழுதே மூடாக்கை அவிழ்த்து மணமகனை பார்க்க விடுவார்கள் அந்த பழக்கமானது காலத்திற்கேற்ப கொஞ்சம் கொஞ்சமாக மாறி தற்பொழுது பெண்களை சுலபமாக சந்தித்து வருங்கால திட்டங்களை தீட்டி விட்டே திருமணம் செய்கின்றனர்.

Happy Bride and Groom

இது போன்ற ஒரு சில செயல்கள் வரவேற்கத்தக்க இருந்தாலும் சிலர் அத்துமீறி சில நாகரிகமற்ற செயல்களை நம் பண்பாட்டினுள் கொண்டுவருவது நம்மில் மூத்தவர்களுக்கு வேதனையை அளிக்கும் படி அமைந்துள்ளது. அழகாக வகுத்திருந்த நமது வாழை இழை சாப்பாடை தவிர்த்து தற்பொழுது பீட்சா பர்கர் உட்பட பல கலப்பட உணவுகளை தான் நாம் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றோம். அது ஏகப்பட்ட பின் விளைவுகளைகளிலும் நோய்களிலும் தான் போய் முடிகின்றன.

அதே போல் நாம் மிகவும் புனிதமாக நினைத்து நடத்தும் திருமணங்களிலும் தற்பொழுது நாகரீக கலப்பிடம் உருவாக ஆரம்பித்துள்ளது. இதன் ஆரம்பம் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் விளைவு பெரும் ஆபத்தை ஏற்படும் என்பதில் மாற்று கருத்தையே கிடையாது. அந்த வகையில் இளம் தம்பதியினர் எடுத்துள்ள அவுட் டோர் போட்டோஷூட் ரசிகர்களின் மத்தியில் பெரும் விமர்சனத்தை பெற்று வருகின்றது. அந்த கூத்தை நீங்களே பாருங்கள்!

Couple Outdoor Photoshoot Couple Outdoor Photoshoot

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here