விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான காமெடி நடிகரான நாஞ்சில் விஜயன் மூன்று நாட்களுக்கு முன்பு சூர்யா தேவி மற்றும் சக ரவுடிகளால் தாக்கப்பட்ட நிலையில். நாஞ்சில் விஜயன் தற்பொழுது சூர்யா தேவிக்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும் சூர்யா தேவி ஞாயிறு காலை பத்து மணிக்கு உன்னை பார்த்து கொள்வதாக சவால் விடுத்துள்ளார்.
காமெடி நடிகரான நாஞ்சில் விஜயும் சூர்யா தேவியும் சேர்ந்து பிக் பாஸ் புகழ் வனிதாவிற்கு பீட்டருடன் நடந்த மூன்றாவது திருமணத்தை விமர்சித்தும் வனிதாவை திட்டியும் வந்தனர். இதனால் மனமுடைந்த வனிதா சூர்யா தேவி மற்றும் நாஞ்சில் விஜயன் மீது காவல் துறையில் புகார் அளித்தார். அதனால் பின்வாங்கிய நாஞ்சில் தனக்கும் சூர்யாவுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்று கூறி வணிதாவிடம் மன்னிப்பு கேட்டார்.
தனுக்கு துரோகம் செய்த நாஞ்சிலின் மீது கோபமடைந்த சூர்யா தேவி அவரை வீடு புகுந்து ஜட்டியுடன் ஓட விட்டு அடித்துள்ளார். இதனால் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சூர்யா தேவி போலீசாரால் கைது செய்யப்பட்டர். அத்துடன் பிரச்சனை முடிந்தது என்று நினைத்திருந்த நிலையில் தற்பொழுது சூர்யா தேவி தலையில் அடிபட்டது போல் தன் சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் “டேய் நாஞ்சில் விஜயன் என்ன நடக்குதுன்னு நான் சொல்றேன் வரும் ஞாயிறு காலை 10 மணிக்கு நான் லைவ் வரேன்” என்று சூர்யா தேவி கூறியுள்ளார். அதற்கு “பாப்பா மண்டைல யாரோ கேக் கட்டிங் பண்ணிருக்காங்க போல” என்று நாஞ்சில் விஜயன் கேலி செய்துள்ளார். சூர்யா தேவியை யார் தாக்கினர் அதற்கு பின்னர் இவர்கள் இருவருக்கும் என்ன பிரச்சனை போன்ற பல கேள்விகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தான் பதில் வரும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப் படுகிறது.
தவளை தன் வாயால் கெடும் என்ற பழமொழிக்கேற்ப இருவரும் மாத்தி மாத்தி வாய் பேசிக்கொண்டு அடித்துக்கொள்வது எங்க தான் போய் முடியுமென்று தெரியவில்லை. முடியும் வரை வேடிக்கை பார்ப்போம்!