பாகற்காய் என்றாலே அதனை தூர தள்ளுபவர்கள் பலரும் உண்டு. காரணம் அதனின் அதனின் கசப்பு தன்மை தான். புடலங்காய் சுரைக்காய் போன்ற தாவர வகையை சேர்த்து இந்த பாகற்காயில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி அறிந்தால் நீங்கள் கசந்தாலும் சரி சாப்பிட்டு விடலாம் என்று நினைப்பீர்கள். வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த பாகற்காயை சாப்பிட்டால் உடலில் ஏற்படும் பயன்களை பற்றி இப்பதிவினில் காணலாம்.
முதலில் பாகற்காய் கசப்பு என்று நினைப்பவர்கள் பாகற்காயை மற்ற பழங்கள் போல் ஜூஸாக அரைத்து அதில் தேன் கலந்து குடித்து வந்தால் பாகற்காயின் கசப்புத்தன்மையும் பெரிதளவில் உரைக்காது அதே போல் ஆஸ்துமா நுரையீரல் அலர்ஜி போன்ற பிரச்சனைகளில் இருந்து நாம் தப்பிக்க உதவும். அதே போல், உடலின் ஆற்றலை மேம்படுத்தி நம் உடலின் வலிமையை அதிகரிக்கவும் பயன்படுகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் அத்தியாவசியமான மருந்து பாகற்காய் தான். சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது பாகற்காய் சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவை குறைக்க மிகவும் உதவியாக அமையும் இந்த பாகற்காய். வருமுன் காப்பதே சிறந்தது என்பது போல் சர்க்கரை நோய் இல்லாதவர்களும் இதை வாரத்திற்கு ஒரு தடவையாவது சாப்பிட்டால் நன்று.
வயிற்று பிரச்சனைகளில் இருந்து விடுபட மிகவும் உதவியாக இருக்கும் இந்த பாகற்காய் செரிமான பிரச்சனைகளை தீர்ப்பதோடு வயிற்றில் உருவாகும் புழுக்களை அழித்து குடல் இயக்கத்தை சீராக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கும் பாகற்காய் மிகச் சிறந்த மருந்து. பாகற்காய் ஜூஸ் அடிக்கடி குடித்து வந்தால் உடம்பில் உள்ள அழுக்குகளை சுலபமாக நீக்கலாம்.
ருசித்து கற்றுக்கொண்ட இந்த மக்களால் தற்பொழுது பல மருத்துவ குணங்களை கொண்ட பாகற்காய் வேளாண்மை குரைந்துள்ளது சற்று வேதனையளிக்கிறது. ஆதலால் உங்கள் மாடித் தோட்டங்களில் பாகற்காய் செடிகள் வளர்த்தல் பாராட்டக்குறியது. நாட்டு பாகற்காய் வளர்த்தால் இன்னும் சிறந்தது. வாழ்க வளமுடன்!