Ammu Ramachandran photos

திருக்குமரன் தயாரிப்பில் அஹ்மத் இயக்கத்தில் ஜீவா, வினய், சந்தானம் போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் “என்றென்றும் புன்னகை”. 2013-யில் வெளியான இத்திரைப்படம் இளைஞர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. காமெடியிலும் கலக்கிய இந்த திரைப்படத்தில் சந்தானம் முக்கிய பங்கு வகித்திருப்பர்.

அதில் கிராமத்து பெண்ணை திருமணம் செய்திருப்பார் சந்தானம். இரவு நேரங்களில் வேளைக்கு சென்று வரும் சந்தனத்தை சந்தேகப்படும் அவரது மனைவி தன் உற்றார் உறவினர் அனைவரையுமே அழைத்து பெரும் பஞ்சாயத்தையே நடத்தி விடுவார். அப்படி சூப்பர் காமெடியில் ஈடுபட்டிருந்த சந்தானத்தின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்த அம்மு புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

சென்னையில் பிறந்த அம்மு ராமச்சந்திரன் அவர்கள் முதலில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 பாய்ஸ் நடிப்பில் வெளிவந்த “சரோஜா” என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். உதவி கதாபாத்திரங்களிலே நடித்த அம்மு அவர்கள் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதன் பின் தொலைக்காட்சிகளிலும் தோன்ற ஆரம்பித்த அம்மு அவர்கள் தற்பொழுது தமிழ் கடவுள் முருகன், மாயா, பைரவி அவங்களுக்கு பிரியமானவள் போன்ற நாடகங்களில் நடித்து வருகிறார்.

இவர் மாயா நாடகத்தில் வில்லியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 38 வயதாகும் இவர் இன்னும் இளமை தான் என்று தன் போட்டோக்கள் வாயிலாக ரசிகர்களுக்கு நிரூபித்து வருகிறார். என்றென்றும் புன்னகை திரைப்படத்தில் தன் கணவன் நைட் ஷிப்ட் போவதை நினைத்து வருத்தப்பட்ட அம்மு அவர்கள் தன் போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் மனதில் பதிந்து இரவு நேரங்களில் தூங்க விடாத கனவுக் கன்னியாக திகழ்கிறார். அவரது சில புகைப்படங்கள் உங்க பார்வைக்காக

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here