தேநீர் என்பது களைத்துப்போன போன ஒருவரை புத்துணர்ச்சி படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. நம்மில் பலரும் காலையில் எழுந்த உடன் பருகுவது தேநீரை தான். காரணம் அது நம் சோர்வை நீக்கி அந்த நாளை தொடங்குவதற்கான ஆற்றலை தருவதால் தான். அப்படிபட்ட தேநீரில் ஒன்றான காபியின் பயன்களை பற்றி விவரிப்போம்.
என்னதான் காபி பருகுவதனால் இன்சோம்னியா (insomnia), ஜீரன கோளாறு, ரத்த அழுத்தம், இதய துடிப்பு அதிகரித்தல் போன்ற ஆபத்துகள் வருவதாக பலரும் கூறினாலும் அதில் உள்ள மருத்துவ பயன்கள் ஆபத்துகளை விட அதிகமே என்று சமீபத்தில் நடந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. காபி குடிப்பதனால் ஏற்படும் ௫ முக்கிய பயன்களை பற்றி கீழ் பத்தியில் காண்போம்!
1.அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகரிக்க உதவுகிறது.
மற்ற வகையான தேநீர்களை காபியுடன் ஒப்பிடும் பொழுது காபியில் அதிகப்படியான ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. இந்த ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்கள் இருதய நோய்கள் மற்றும் புதுநோய் களில் இருந்து நம்மை காக்க உதவுகிறது.
2.மூளையின் செயலறையை அதிகரிக்கும்
நாம் காபியை பருகும் பொழுது அதிலுள்ள அமிலம் மூளைக்கு ரத்த குழாய் மூலம் சென்று அதன் ஆற்றலை அதிகரிக்கும். காபி பருகுவதனால் ஞயாபக தன்மை, திடீர் முடிவு எடுக்கும் திறன், அறிவாற்றல் செயல்பாடு உள்ளிட்ட பல மூளையின் செயல்களையும் அதிகரிக்கும்.
3.உடல் எடையை பராமரிக்க உதவும்
காபியில் உள்ள அமிலங்கள் நமது உடம்பில் உள்ள தேவை இல்லாத கெட்ட கொழுப்புகளை கரைய வைக்கின்றது. குண்டாக இருப்பவர்களுக்கு 10 சதவீத கொழுப்பும் மெலிசாக இருப்பவர்களுக்கு 29 சதவீத கெட்ட கொழுப்பும் கரைய வாய்ப்புள்ளது.
4.நோய் தாக்கத்தில் இருந்து காக்கின்றது
காபி பருகுவதனால் மன அழுத்தம், மனச்சோர்வு, கீல்வாதம் ,அல்சைமர் நோய், பார்கின்சன் நோய், இரண்டாம் வகை நீரிழிவு நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் கூட வராமல் நம்மை பாதுகாக்கலாம்.
5.கல்லீரலை மேம்படுத்தல்
அன்றாடம் ஒரு காபி கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளை குறைத்து கல்லீரலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவும்.
காபி குடிப்பதினால் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லையா என்றால் கண்டிப்பாக இருக்கின்றது, அதும் 4-5 காபி ஒரு நாளில் தொடர்ந்து குடித்தால் தான். ஒரு நாளுக்கு ஒரு காபி குடித்தால் மனித உடலுக்கு மருத்துவ பயன்கள் கண்டிப்பாகவே இருக்கின்றது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு, வாழ்க வளமுடன்!!