உலக மருத்துவத்திலும் சரி பண்பாட்டிலும் சரி உலகிற்கு முன்னணியாக திகழ்பவர்கள் தமிழர்கள் தான். கல் தோன்றி மண் தோன்றிய மனிதன் தோன்றிய நாள் முதலே தமிழனும் அவனது கலாச்சாரம் மருத்துவமும் வாழ்ந்து வரும் நிலையில் தமிழரின் அறிவியலை கண்டு தற்பொழுதைய உலக ஆராச்சியாளர்கள் வாயடைத்து போனதற்கு வாழை இலையில் பரிமாறும் உணவு ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது.
கல்யாணம் முதல் கருமாதி வரை பயன்படுத்தும் இந்த வாழை இழை எதற்காக பயன்படுத்துகிறோம் தெரியுமா? சுலபமாக அப்புறப்படுத்தலாம் என்பதற்காகவா? ஆனால் உண்மையான காரணம் அது இல்லை. வாழை இலை எப்பொழுது பசி உணர்வை உண்டாக்கும் அதனால் நம் விருந்தாளிகள் வயிர் நிறைய சாப்பிட்டு மனம் நிறைய செல்வார்கள் என்பதற்காக. அது மட்டுமின்றி, வாழை இலை கிருமி நாசினியாகவும், வயிற்று புண்களை கட்டுப்படுத்துவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குவதற்கும், சுற்று சூழலை பாதிக்காத வகையில் இருப்பதற்கும் உதுவுகிறது.
உணவு சார்ந்த கலாச்சாரத்தை தமிழர்கள் ருசிக்காக மட்டும் வகுக்காமல் மருந்தாகவும் வகுத்துள்ளனர். இதற்கு சான்று எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, கலித்தொகை போன்ற சங்க கால இலயக்கியங்களில் இடம்பெற்றுள்ளது. நம் முன்னோர்கள் உணவை பற்றி செய்த பல ஆராச்சிகளும் பதிவிடப்பட்டுள்ளது.
தமிழரின் உணவு பரிமாறும் முறையில் உள்ள பின்னணி:
கைக்கு எட்டாத வகையில் உப்பை வைப்பதினால் எளிதில் உப்பு உணவில் கலந்து விடாது. தேவையான பொழுது மட்டும் எடுத்து கலந்து கொள்ளும் படி ஓரமாக இருக்கும்.தப்பி தவறி கசப்பான உப்பு அல்லது காரமான மிளகாய் போன்றவற்றை உட்கொண்டு விட்டால் அதன் தாக்கத்தை தணிக்க இனிப்பு பலகாரம் பக்கத்தில் இருக்கும்
முக்கிய உணவுகளான சாதம் குழம்பு மற்றும் பொரியல்கள் போன்றவற்றுக்கு எடுத்து எளிதில் சாப்பிடும் படி மிக அருகிலும் இழையின் மைய பகுதியிலும் பரிமாறுவார்கள். அளவோடு சாப்பிடுவதற்காக வயிற்றை நிரப்பும் நொறுக்கு தீனிகள் சித்ரான்னம் போன்றவை வைப்பார்கள்.
தமிழரின் வியக்கவைக்கும் அறிவியல்:
தமிழரின் பாரம்பரிய உணவு கலாச்சாரத்தின் படி எப்பொழுது சாதம் வைத்த பின் செரிக்க நேரமெடுக்கும் பருப்பு வகை குழம்பை முதலில் ஊற்றுவார்கள், அதன் பின் வயிற்றை இதம் படுத்தும் படி புளிக்குழம்பு, அதன் பின் நல்ல செரிமாணத்திற்காக ரசம், அதன் பின் வயிற்றையும் உடலையும் சூட்டிலிருந்து காக்க மோர் என வகுத்து பரிமாறுவார்கள்.
இப்படி சரியான உணவுகளை சரியான சீரமைப்பில் சப்படுவதினால் எளிதில் ஜீரணம் ஆகி உடல் நலத்தையும் மன நலத்தையும் நன்றாக வைத்து கொள்ள உதவியாக இருந்தது. அனால் தற்பொழுது சாப்பிடும் தட்டு முதல் அன்னம் வரை பிளாஸ்டிக்ஸில் வர தொடங்கி விட்டது. இதை எல்லாம் தவிர்த்து நமது பரம்பரியப்படி உண்டால் மட்டுமே நம் அடுத்த சங்கதியினர் ஆரோக்கியத்துடன் வாழ முடியும். வாழ்க வளமுடன்!