மனிதராக பிறந்த அனைவரும் இறைவனிடம் நாம் வேண்டுவது அணைத்து வகையான செல்வங்களும் பெற்று உடல் ஆரோக்கியத்துடனும் நல்ல மதிப்புடனும் வாழ வேண்டும் என்று தான். நாம் என்ன தான் கோவில் கோவிலாக சென்று செல்வங்கள் பெற்றாலும் அது நம் வீட்டினுள் வந்து செழிக்க சில விசயங்களும் காரியங்களும் நாம் செய்ய வேண்டும். அதனை பற்றி விளக்கமாக கீழ் பத்தியில்
மாலை 6 மணிக்கு மேல் எப்பொழுதும் நம் வீட்டினை பெருக்க கூடாது அப்படியே பெருகினாலும் குப்பைகளை வெளியில் கொட்டக்கூடாது. அப்படி செய்வது வர லக்ஷ்மியை தடுத்து நிறுத்துவது போலாகும்.
வீட்டில் எப்பொழுது துளசி ஒட்டடை போன்றவை வீட்டில் சேர விடக்கூடாது. வீட்டை சுத்தமாக வைத்திருப்பதில் அதிகம் நாட்டம் கொள்ள வேண்டும். பகலில் வீட்டின் முளைகளில் குப்பைகளை சேகரித்து வைக்க கூடாது.
நம் வீட்டு பெண்கள் எப்பொழுதும் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிந்திருந்தால் பண வரவு பெருகும். அதே போல் பசும் பால் தயிரை நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் உடம்பில் பூசி குளித்தால் நம்மை சுற்றியுள்ள துஷ்ட்ரா சக்திகள் காணாமல் போகும்.
பசுவின் கோமியத்தை தினமும் அல்லது வாரத்தில் செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமையன்று வீடு தோறும் தெளித்து விட்டால் தரித்திரம் நம் வீட்டில் நிலைக்காமல் நீங்கி விடும். அதே போல் நாம் குளிக்கும் நீரில் கூட கோமியத்தை கலந்து குளித்தால் இன்னும் நன்மை.
பாசி பருப்பு மட்டும் வெல்லத்தை தண்ணிரில் ஊறவைத்து அடுத்த நாள் பறவைகளுக்கும் பசுவிற்கு இரையாக கொடுத்தால் லக்ஷ்மியின் பார்வை பட்டு நம்ம வீட்டில் செல்வம் பெருகும் என்கின்றது புராணங்கள். இதை தொடர்ந்து செய்தல் தனக்கு உள்ள பண தடைகள் நீங்கி கிடைக்க வேண்டிய செல்வம் தக்க சமயத்தில் கிடைக்கும்.
பாசி பருப்பை ஒரு மூட்டையில் முடிந்து உறங்கும் பொழுது தலையின் அடியில் வைத்து உறங்கி அடுத்த நாள் நீர் நிலைகளில் ஓடவிட்டால் உங்கள் பண பிரச்சனைகள் ஓடி விடும்.
குபேர மந்திரத்தை தினமும் 7 முறை உச்சரித்து வந்தால் வருமானம் பெருகும்.
நேர்மையான உழைப்பும் கடவுள் மேல் அளவில்லா பக்தியும் இருந்தால் சர்வ செல்வங்களும் உங்களை தேடி வரும். வாழ்க வளமுடன்!