சமூக வலைத்தளங்களை தற்பொழுது சினிமா நடிகைகள் தங்கள் புகைப்படங்களை வெளியிடும் தளமாக பயன்படுத்தி வரும் நிலையில் 90 ஸ் களில் மசாலா நடிகையாக திகழ்ந்த மாளவிகா நீச்சல் குளத்தில் உள்ளபடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்பொழுது ரசிகர்களின் மத்தியில் வைரலாகி உள்ளது.
பெங்களூரு கர்நாடகாவை சேர்ந்த சுவேதா கொன்னுரு மேனன் என்ற மாளவிகா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிகப் படியான திரைப்படங்கள் நடித்தவர். சில கன்னட மலையாள படங்களிலிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 1999-ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் அஜித் நடித்த உன்னை நினைத்து திரைப்படம் மூலம் மாளவிகா தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
டேபுட் செய்த முதல் வருடத்திலேயே 5 படங்கள் நடித்த மாளவிகா மேனன் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வந்தார். 2000-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமான மாளவிகா தென் இந்திய மொழிகள் அனைத்திலும் தோன்றத் தொடங்கினர். அவர் நடித்த திருட்டு பயலே, வெற்றி கோடி கட்டு, நான் அவன் இல்லை போன்ற திரைப்படங்கள் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
சினிமாவில் நல்ல மார்க்கெட் இருந்த நிலையில் 2007 ம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்த பின் படிப்படியாக மார்க்கெட் குறைந்தது. அதன் பின் பெரிய அளவில் திரைப்படங்களில் தோன்றாத மாளவிகா மேனன் ஒரு சில படங்களில் கெஸ்ட் ரோல் நடித்து வருகிறார். அவர் தற்பொழுது நீச்சல் குளத்தில் குளித்தபடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!