Ammu abirami

சினிமாக்களில் எப்பொழுதுமே இரண்டு வகையான நடிகைகள் உண்டு சில நடிகைகள் கிளமர் காட்டி ரசிகர்களை ஈர்ப்பதும் உண்டு சில நடிகைகள் சர்வ லட்சணத்துடன் ஹோம்லியாக நடித்து ரசிகர்களை ஈர்ப்பதும் உண்டு. அப்படி ஹோம்லியாக மட்டும் தோன்றி இளைஞர்களின் மனதை வென்ற அபிராமி தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கொஞ்ச கொஞ்சமாக கரைத்து வருகின்றது.

தமிழ் சினிமாக்களில் இதுவரை மிகச்சிறந்த திரில்லர் திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படும் ராட்சசன் திரைப்படம் டில்லி பாபு தயாரிப்பில் ராம் குமார் தயாரிப்பில் விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் நடிப்பில் 2018-ம் ஆண்டு பாக்ஸ் ஆபீஸ் படமாக வெற்றி படைத்தது. அத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பேசப்பட்ட நிலையில் அத்திரைப்படத்தில் விஷ்ணு விஷாலின் அக்கா பெண்ணாக நடித்த அபிராமி பலராலும் கவனிக்க பட்டார்.

Actress Abirami Abirami

பரதன் இயக்கத்தில் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த பைரவா திரைப்படம் மூலம் 2017-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமான அபிராமி என் ஆளோட செருப்பை காணோம் தீரன் அதிகாரம் ஒன்று தானா சேர்ந்த கூட்டம் போன்ற தமிழ் படங்களில் துணை கதாபாத்திரமாக தோன்றினார். அதன் பின் தெலுங்குவிலும் ராட்சசன் திரைப்பட ரீமேக் மூலம் டேபுட் செய்த அபிராமி தெலுங்கு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றார்.

சென்னையை சேர்ந்த அபிராமி தற்பொழுது வளர்ந்து வரும் இளம் நடிகையாக திகழ்ந்து வருகிறார். 20 வயதாகும் இவருக்கு பேபி அனிகா சாரா போன்ற இளம் வயது நடிகைகள் போட்டியாக இருந்தாலும் அபிராமி அவர்களை விட தனித்துவமாக தெரிகிறார் காரணம் அவரது ஹோம்லி லுக் தான். ஆனால், இவர் நடித்த பாதிப்படங்களில் கடைசி வரை தொடராமல் பாதியில் இறக்கும் கதாபாத்திரமாக நடிப்பது ரசிகர்களுக்கு வருத்தமான ஒன்றாக அமைகிறது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அபிராமி அவ்வப்பொழுது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர். அப்படி சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. அதைக்கண்ட ரசிகர்கள் பலரும் கட்டுன இப்படி ஒரு பொண்ண தான் கட்டணும் என புகழ்ந்து வருகின்றனர்.

Ammu Abirami Ammu Abirami Ammu Abirami Ammu Abirami Abirami in Saree

 

View this post on Instagram

 

A post shared by Ammu_Abhirami (@abhirami_official) on

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here