தமிழ் சினிமாவில் பல நடிகைகள் அறிமுகமானாலும் ஒரு சில நடிகைகள் முகம் மட்டும் தான் மனதில் பதியும். அது அவர்களது முக ஜாடை அல்லது பட கதாபாத்திரத்தை பொறுத்தது. அப்படி சமீபத்தில் வெளிவந்த சில்லு கருப்பட்டி திரைப்படத்தில் நடித்த நிவேதிதா இளைஞர்கள் பலரையும் கவர்ந்தார். இந்நிலையில் அவர் தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படங்களும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் படி அமைந்திருக்கிறது.
ஹலிதா சமீன் இயக்கத்தில் 2D என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பில் சமுத்திரக்கனி, சுனைனா, சாரா அர்ஜுன் போன்ற பல பிரபலங்கள் நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சில்லு கருப்பட்டி. 4 வகையான மக்களின் வாழக்கையை ஒரே படத்தில் காட்டி இருந்த இத்திரைப்படம் ரசிகர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று விருதுகளால் பாராட்டவும் பட்டது.
அதிலும் மணிகண்டன் மற்றும் நிவேதிதா நடித்த அந்த கதை பலருக்கும் பிடித்த ஒன்று. புற்றுநோய்யால் பாதிக்கப்பட்ட கதாநாயகனை எந்த வித எதிர்பார்ப்பின்றி காதலிக்கும் கதாநாயகி கடைசி வரை காதலை கை விடாமல் இருப்பது போல் சித்தரிக்கப்பட்டிருந்தது. இக்கதை இளைஞர்களின் மனதில் காதலை பற்றின நல்ல கருத்தை பாதித்தது.
நடிகர் மற்றும் இயக்குனரான மணிகண்டன் ஏற்கனவே நமக்கு அதிகம் தெரிந்த முகம் என்பதால் அவரை பற்றி பெரிய அறிமுகம் தேவை இல்லை ஆனால் நிவேதிதா அவரை நாம் யாரும் பெரிதாக பார்த்திருக்க மாட்டோம் ஆனாலும் அவரது லட்சணமான முகம் அளவான உடல் என வருணிக்க வார்த்தை இல்லாத அளவிற்கு அழகாக தோற்றமளிக்கிறார். அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கொஞ்சம் கொஞ்சமாக உருக வைக்கின்றது. அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!