மற்ற மூன்று சீசன்களை விட சுவாரசியமாக அமைந்திருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியானது 30 நாட்களை கடந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. 18 போட்டியாளர்களின் 2 போட்டியாளர்கள் ஏற்கனவே வெளியேறியுள்ள நிலையில் சுசித்ரா வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்த உடன் 16 போட்டியாளர்களுக்குள் சண்டை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

ஆட்டத்தின் முதல் நாள் முதலே கடுமையான போட்டியாளராக கருதப்பட்டு வரும் பாலாஜி முருகதாஸ் அவர்கள் விளையாட்டில் பல தந்திரங்களையும் பயன்படுத்தி வருவது அப்பட்டமாக தெரிகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் சிறப்பாக விளையாடினாலும் அவர் பேசும் சில விசயங்கள் போலியாக இருப்பது போல் ரசிகர்களின் மத்தியில் கருத்துகள் எழுந்து வருகின்றது.

Balaji Murugadoss

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் தங்கள் கடந்து வந்த பாதைகள் டாஸ்கின் பொழுது தனது அம்மா மதுவிற்கு அடிமையானார் எனக்கு நண்பர்களும் கூட கம்மி என கூறி இருந்த பாலாஜி அவர்கள் கடந்த வாரம் நடந்த டாஸ்க்கில் தன் அம்மா ஒரு அப்பாவி எனவும் அவருக்கு வெளியுலக விவரம் பெரிதாக தெரியாது எனவும் கூறியுள்ளார்.

இப்படி தில்லு முள்ளாக பேசியுள்ள பாலாஜியின் மேடைப் பேச்சியில் எது உண்மை என்பதை உணர முடியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஒரு வேலை இவர் பொய் சொல்லி அனுதாப ஓட்டுகள் பெற நினைக்கிறாரா என்று சில ரசிகர்களும் குடிப்பவர்கள் அப்பாவியாக இருக்க கூடாத என்ற சில ரசிகர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவரை குற்றம் கண்டு பிடித்த ரசிகர்கள் அவருக்கென ஒரு குறும்படம் வெளியிட்டுள்ளார். அப்படம் உங்கள் பார்வைக்காக!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here