“சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்ட சின்ன குழந்தையும் சொல்லும்” என்ற பாடல் எழுதும் அளவிற்கு பிரபலமானவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே போற்றும் படி நடித்து வெற்றியடைந்த ரஜினிகாந்துடன் மறைந்த நடிகை மற்றும் அரசியல்வாதியான ஜெ. ஜெயலலிதா நடிக்க மறுத்துள்ள செய்தி பல ஆண்டுகளுக்கு பின் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
பெங்களூரில் பிறந்து படிப்பை முடித்து வயிற்று பிழைப்பிற்காக பேருந்து நடத்துனராக பணியாற்றி வந்த நிலையில் தன் முடிவை மாத்தி மெட்ராஸ் சினிமா கல்லூரியில் மாணவராக சேர்ந்து நடிகர் ஆனவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். 1975-ம் ஆண்டு தான் அறிமுகமான “அபூர்வ சகோதரர்கள்” திரைப்படம் முதல் கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த “தர்பார்” திரைப்படம் வரை பல வெற்றி படங்களை கொடுத்தவர் திரு ரஜினிகாந்த்.
ஒரு பக்கம் ரஜினி வெற்றியடைந்த நடிகர் என்றால் மறுபக்கம் தமிழ் சினிமாவில் கலக்கிவந்த வந்த நடிகை ஜெயலலிதா. எம் ஜி ராமசந்திரன் மறைவிற்கு பின் முழு நேர அரசியலில் ஈடுபட்டு வந்த ஜெயலலிதா அவர்களை சினிமா வாய்ப்பு கிடைக்காதலால் ஜெயலலிதா அரசியலில் இறங்கிவிட்டார் என பல ஊடகங்களும் விமர்சித்து வந்தனர்.
அந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த ஜெயலலிதா “எனக்கு சினிமாவில் மார்க்கெட் எல்லாம் குறையவில்லை, எனக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வம் தான் குறைந்துள்ளது. எனக்கு மார்க்கெட் குறைந்திருந்தால் பில்லா பட தயாரிப்பாளர் ரஜினிகாந்துடன் ஜோடி சேர கால் சீட் கொடுத்திருக்கமாட்டார். ரஜினிகாந்த் ஒரு சூப்பர் ஸ்டார் அவருடன் நடிக்க யாரும் மறுத்திருக்க மாட்டார்கள் ஆனால் நான் மறுத்ததற்கு காரணம் எனக்கு சினிமாவில் விருப்பம் இல்லாமல் தான்!” என கடிதத்தில் எழுதினார்.
அதன் பின் பில்லா திரைப்படம் ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீ பிரியா நடிப்பில் 1980-ம் ஆண்டு வெளியாகி நடிகர்கள் இருவருக்கும் ஒரு திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது. அத்திரைப்படத்தில் இடம்பெறும் “என் கோடி பார்க்கவேண்டிய எடத்துல வேற எவன் கோடி டா பறக்கும்” என்ற வசனம் பலரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.