Simbu in controversy

சர்ச்சைகளுக்கு பெயர் போன லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்பு அவர்களின் திரைப்படம் சமீப காலங்களில் எதும் வெளிவராத நிலையில் அவரது மார்க்கெட் அவ்ளோதான் என்று பலரும் தெரிவித்து வந்த நிலையில் இந்த லாக்டவுனில் உடல் எடையெல்லாம் குறைத்து வேற மாதிரியான லுக்கில் ஈஸ்வர் திரைப்படம் மோஷன் போஸ்டரில் தோற்றமளித்துள்ளார்.

அவருக்கு ஒரு பக்க பலமாக ரசிகர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் ஒரு குழுவினர் அவரை வளர விடாமல் ஒவ்வொரு படத்திற்கும் குடைச்சல் கொடுத்து கொண்டே வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் அவர் பாம்பை பிடித்திருப்பது போல் ஈஸ்வரன் திரைப்படத்தின் பஸ்ட் லுக் வந்திருக்கும் நிலையில் வன விலங்கு துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Eswaran Movie Poster

பிரபல தமிழ் பட நடிகர் டி.ஆர்.ராஜேந்திரன் அவர்களின் மகனான சிம்பு அவர்கள் 1984-ம் “உறவை காத்த கிளி” என்ற திரைப்படம் மூலம் குழந்தை கதாபாத்திரமாக அறிமுகமானார். அதன் பின் சினிமாவில் குழந்தை கதாபாத்திரமாக தொடர்ந்து நடித்து வந்த நிலையில் 2002-ம் ஆண்டு தன் தந்தை டி.ஆர்.ராஜேந்தர் இயக்கத்தில் காதல் அழிவதில்லை திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதன் பின் தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வந்த சிம்பு பீப் சாங் சர்ச்சையில் சிக்கிய பின்னர் தொடர்ந்து சரிந்து வருகிறார். கம் பேக் கொடுக்க முற்பட்டாலும் அந்த திரைப்படம் தோல்வியில் முடிவடைகிறது. இந்நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் ஈஸ்வரன் திரைப்படத்தில் சிம்பு அவர்கள் நிஜ பாம்பை பிடிப்பது போல் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகின்றது. அவர் டூப் போடாமல் நடித்திருப்பது சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ உங்கள் பார்வைக்காக!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here