Dhanya Balakrishna photos

தமிழ் சினிமாவில் ஆர்யா, நயன்தாரா உட்பட பல பிரபலங்களுக்கும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ராஜா ராணி. இயக்குனர் அட்லீயின் முதல் திரைப்படமான ராஜா ராணி 2013-ம் ஆண்டு வெளியாகி மக்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, தமிழ் சினிமாவின் சிறந்த காதல் படமாகவும் ஒரு காலகட்டத்தில் கருதப்பட்டது.

அதில் ஆண்களுக்கு கல்லூரி வாழ்க்கையில் தன்னைச் சுற்றி ஒரு நண்பர்கள் பட்டாளம் இருப்பது போல் இந்த திரைப்படத்தில் நயன்தாரா காலேஜ் மாணவியாக நடிக்கும் பொழுது அவரை சுற்றி ஒரு நண்பர் படை இருக்கும். அதில் நடித்திருந்த தன்யா பாலகிருஷ்ணன் தற்பொழுது துணை கதாபாத்திரங்கள் தோற்றங்கள் மாறி ஒரு முழு நடிகையாக வளர்ந்து வருகிறார்.

Dhanya Balakrishnan

பெங்களூரை சேர்ந்த நடிகை மற்றும் மாடலான தன்யா பாலகிருஷ்ணன் 2011-ம் ஆண்டு சூர்யா மற்றும் ஸ்ருதி ஹாசன் நடித்த “7-ஆம் அறிவு” திரைப்படம் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் பிற மொழிகளிலும் டேபுட் செய்த தன்யா நீந்தானே என் பொன்வசந்தம், ராஜா ராணி, யார் இவன் போன்ற தமிழ் படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்துள்ளார்.

வெப் சீரிஸ்களிலும் அதிகம் தோற்றமளிக்கும் தன்யா பாலகிருஷ்ணன் அவர்கள் சமூக வலைத்தள பக்கங்களை கொஞ்சம் அதிகமாக பயன்படுத்துபவர். தன் ரசிகர்களுக்கென சமீபத்தில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. அளவான உயரம் அளவான எடை அளவில்லா அழகு என சர்வ லட்சணத்தையும் கொண்ட இவரது புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் பொண்ணுன்னா இப்படித் தான் இருக்கனும் என விமர்சித்து வருகின்றனர்.

Actress Dhanya Dhanya Dhanya Balakrishnan Actress Dhanya Dhanya Dhanya Balakrishnan

 

View this post on Instagram

 

A post shared by Dhanya Balakrishna (@dhanyabalakrishna) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here