மாடல் மற்றும் நடிகையான சாக்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தில் துணை கதாபாத்திரமாக தோன்றி பிரபலமானார். அதன் பிக் தமிழ் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் ௩ இல் பங்கேற்று சக போட்டியாளர் கவினுடன் காதலில் விழுந்த உடன் பிரபலத்தின் உச்சத்தில் இருந்தார்.
இருவருக்கும் காதல் மலரும் வகையில் சென்ற நிலையில் குறுக்கே புகுந்த லொஸ்லியா அதனை முக்கோண காதலாக மாற்றியதால் சாக்ஷி கோபமடைந்த சில நேரங்களில் ரசிகர்கள் முகம் சுளிக்கும் படி நடந்து கொண்டார். இதனால் சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு மக்களின் வாக்கு எண்ணிக்கை குறைவால் வீட்டினை விட்டு வெளியேற்றப் பட்டார்.
காதலில் சொதப்பினாலும் ஒரு கலைஞராக கலக்கி வரும் சாக்ஷி தன்னை விட அதிக நாட்கள் பிக் பாஸ் வீட்டினில் தொடர்ந்து விளையாடிய போட்டியாளர்களை ஒப்பிடுகையில் அதிக படியான திரைப்படங்களில் புக் செய்யப்பட்டு நடித்து வரும் சாக்ஷி அவர்கள் சமீபத்தில் தனியார் யூடூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார். அதில் சாக்ஷி அகர்வாலின் காதல் கதையை பற்றி கேட்ட பொழுது
“நான் என் கல்லூரி படிப்பை படிக்கும் பொழுது நானும் என் கல்லூரி சீனியர் ஒருவரும் காதலித்து வந்தோம். எங்கள் கல்லூரி கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் என்பதால் எங்கள் காதல் கதையில் அதிகம் ரொமான்ஸ் கிடையாது. நானும் அவரும் மூன்று வருடங்களாக காதலித்து வந்த நிலையில் எனக்கு முன்பே படிப்பை முடித்த அவர் கல்யாணத்தை பற்றி பேச ஆரம்பித்தார். நான் சில லட்சியங்களை கொண்டிருந்ததால் அதற்கு மறுத்து விட்டேன் அதனால் எங்கள் காதலும் உடைந்தது” என மன வருத்தத்துடன் கூறினார்.
பிக் பாஸ் கவின் தான் சாக்ஷியின் முதல் காதலன் என ரசிகர்கள் பலரும் நினைத்திருந்த நிலையில் அவருக்கு முன்பே ஒரு சாப்டர் உள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. இதைப் பற்றின உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.