தென் இந்திய சினிமாவின் கனவுக் கன்னியான காஜல் அகர்வால் கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி தன் நீண்ட நாள் காதலனான கவுதம் கிச்சலு என்ற தொழிலதிபரை தனியார் ஹோட்டல் ஒன்றில் மணந்தார். பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் அந்த வாழ்த்து மழை முடிவதற்குள் தன் கணவருடன் ஹனி மூன் கொண்டாட தனி தீவிற்கு சென்றுள்ளார். அங்கே இருந்து அவர் வெளியிடும் புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த மாடல் மற்றும் நடிகையான காஜல் அகர்வால் தமிழ் தெலுகு ஹிந்தி என மூன்று மொழிகளில் அதிகப்படியான திரைப்படங்கள் நடித்துள்ளார். தமிழைக் காட்டிலும் தெலுங்குவில் காஜல் அகர்வால் அதிக திரைப்படங்கள் நடித்திருந்தாலும் அவர் தமிழ் முன்னணி நடிகர்களான விஜய் அஜித் சூர்யாவுடன் நடித்து மிகவும் பிரபலமானார்.
35 வயதாகும் காஜல் அகர்வால் சில மாதங்களுக்கு முன்பு தான் கல்யாணத்திற்கு ரெடியாகி விட்டதாகவும் வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். அதன் பின் ஊரடங்கில் சிக்கிய காஜல் இந்த சமயத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்து தன் நீண்ட நாள் நண்பரான கவுதம் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்ததாக தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
பதிவிட்டிருந்த படியே சொன்ன தேதியில் முக்கியமான நண்பர்கள் மற்றும் சொந்த பந்தங்களை வைத்து சிறப்பாக நடந்த இத்திருமணத்திற்கு பின்னர் மால்தீவ்ஸ் தீவில் ஹனிமூன் கொண்டாட சென்றுள்ளார். அங்கு பல இடங்களை சுற்றி பார்க்கும் காஜல் கவுதம் தம்பதியினர் புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதில் கனவுக் கன்னி காஜல் மிகவும் கவர்ச்சியாக உள்ளதால் இளைஞர் செம காஜுக்கு ஆளாகியுள்ளனர். அவரது சில ஹனிமூன் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram