Soma Sekar in Soorarai Potru

இயக்குனர் சுதா கங்கோராவின் 10 வருட கனவான சூரரை போற்று திரைப்படம் ஒளிப்பதிவாகி சூர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் ஊரடங்கு காரணமாக இணைய தள வழியில் கடந்த 12-ம் தேதி வெளியிடப்பட்டது. பல தோல்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளான சூர்யா இனி ஹிட் கொடுப்பது சாத்தியம் இல்லாத ஒன்று பலரும் கூறிய நிலையில் அதையெல்லாம் உடைத்தெறிந்து மாபெரும் திருப்புமுனை திரைப்படத்தை தன் நடிப்பில் வெளியிட்டுள்ளார்.

ஏர் டெக்கான் விமானத்திற்கு சொந்தக்காரரான கோபிநாத் அவர்களின் நிஜ வாழ்க்கையை மையமாக கொண்ட இந்த திரைப்படத்தில் கோபிநாத் போலவே சூர்யாவும் இந்தியன் ஆர்மியில் கேப்டனாக பணி புரிவார். சில ஆண்டுகளுக்கு பின் கம்மி விலையில் விமான சேவை அளிக்க விரும்பும் சூர்யா ஆர்மி வேலையை விட்டு விமானம் உருவாக்குவது போல் கதை சித்தரிக்கப்பட்டிருக்கும்.

Som Sekar

அதில் சூர்யா பல தடைகளுக்கு பின் சொந்த விமானம் வாங்கிய பின்னர் விமான நிலையத்தில் விமானம் நிறுத்த சிலர் சதி செய்ததால் ஆர்மி மயானத்தில் விமானத்தை நிறுத்தி ஆர்மி வீரர்களால் கைது செய்யப்படுவர். கைது செய்து மேல் அதிகாரியிடம் கூட்டி சென்றிருக்கும் காட்சியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் சோம சேகர் நடித்திருப்பார். இதை ரசிகர்கள் கவனித்த பகிந்து வருகின்றனர்.

ஏற்கனவே சோம சேகரின் நெய் விளம்பரம் வைரலாக பரவி வந்த நிலையில் தற்பொழுது அவர் நடித்த காட்சியும் வைரலாகி வருகின்றது. அந்தக் காட்சியினை பார்த்த ரசிகர்கள் சோம பிக் பாஸ் வீட்ல பேசவே மாற்றான் இங்க கேப் விடாம பேசிட்டு இருக்கான் என கிண்டல் செய்தும் வருகின்றனர். சோம சேகர் இதற்கு முன்னர் பல படங்களில் கவனிக்கப் படாத கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் ஆனால் அப்பொழுது அவ்வளவு பிரபலம் இல்லாததால் பெரிதாக யாரும் கண்டு கொள்ளவில்லை. சோம் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்த காட்சி உங்கள் பார்வைக்காக!

Som Sekar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here