Genelia photoshoot

இந்திய மாடல் மற்றும் நடிகையான ஜெனிலியா தமிழ் மட்டுமின்றி ஹிந்தி தெலுங்கு மலையாளம் கன்னடா என பிறமொழிகளிலும் தனக்கென்ற தனி அங்கீகாரத்தை படைத்தவர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த ஜெனிலியா டி சௌசா 2003-ம் ஆண்டு “துஜே மெரி கசம்” என்ற ஹிந்தி திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து அதே ஆண்டு சங்கர் இயக்கத்தில் சித்தார்த் பரத் நகுல் போன்ற நடிகர்கள் நடித்த “பாய்ஸ்” திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜெனிலியா தமிழ் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். தெலுங்குவிலும் டேபுட் செய்த ஜெனிலியாவிற்கு மற்ற மொழிகளை காட்டிலும் தெலுங்குவில் பட வாய்ப்புகள் அதிகப்படியாக கொடுக்கப்பட்டன.

Genelia D Souza

மீண்டும் 2005-ம் ஆண்டு விஜய்க்கு ஜோடியாக சச்சின் படத்தில் தோற்றமளித்த ஜெனிலியா சிறு சிறு இடைவேளைகளுடன் தமிழ் சினிமாவில் தோன்றினார். விஜய் நடித்த வேலாயுதம் திரைப்படம் தான் அவர் கடைசியாக தமிழில் தோன்றிய திரைப்படம். அதன் பின் மராட்டிய நடிகரான ரிதேஷ் தேஷ்முக்ஹ் என்பவரை திருமணம் செய்த ஜெனிலியா தாம்பத்திய வாழ்க்கையில் அதிகம் கவனம் செலுத்தினர்.

௨ குழந்தைகளை கொண்ட ஜெனிலியா தற்பொழுது இந்திய சினிமாவில் ஓரிரு படங்கள் மட்டும் நடித்து வருகிறார். நீண்ட நாட்களாக தமிழ் ரசிகர்களின் கண்ணில் சிக்காத ஜெனிலியா தற்பொழுது தங்க நிற உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது தீயாய் பரவி வருகின்றது. இதைக் கண்ட இளைஞர்கள் பலரும் ஜெனிலியாவிற்கு இன்னும் வயசே ஆகவில்லை என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அப்புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!

Genelia D Souza Genelia D Souza Genelia D Souza

 

View this post on Instagram

 

A post shared by Genelia Deshmukh (@geneliad)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here