Bigil girl gets commited

அட்லீயின் இயக்கத்தில் விஜய் மற்றும் நயன்தாராவின் நடிப்பில் பெண்களின் விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்டு வெற்றிக்கண்ட திரைப்படம் பிகில். 25 அக்டோபர் 2019 ம் ஆண்டு கல்பதி தயாரிப்பில் உருவான இத்திரைப்படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆஃபீஸ்சிலும் இடம் பெற்றது.

100 கோடி பட்ஜெட் கொண்டு உருவான இந்த திரைப்படத்தில் கதிர் விவேக் யோகி பாபு டேனியல் பாலாஜி உட்பட பல பிரபலங்களும் நடித்திருந்தனர் அத்துடன் கால் பந்து வீராங்கனைகளாக இந்துஜா ரவிச்சந்தர், அமிர்தா ஐயர், வர்ஷா போல்லம்மா, இந்திரஜா ஷங்கர், ரேபா ஜான் உள்ளிட்டோர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

Bigil Girls

அதில் அனிதாவாக காட்டப்பட்டிருந்த ரேபா மோனிகா ஜான் என்பவர் நேற்று தனது 26-வது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடினர் அப்பொழுது எதிர்ப்பாராத விதமாக ரேபாவின் நீண்ட நாள் நண்பரான ஜோய்மோன் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ப்ரொபோஸ் செய்துள்ளார். அதற்கு ரேபாவும் ஓகே சொன்னதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதைப் பற்றி ஜோய்மோன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுகையில் நானும் ரேபாவும் லாக்டவுன் காரணமாக கடந்த ௬ மாதங்களாக சந்திக்கவில்லை இந்த பிரிவு தான் என்னை ப்ரொபோஸ் செய்ய தூண்டியது என தெரிவித்துள்ளார். மேலும் இவர்களது நிச்சயதார்த்தமும் விரைவில் நடைபெறும் என செய்திகள் வெளியாகியுள்ளன. சினிமாவை பொறுத்தவரை ரேபாவிடம் எந்த ஒரு திரைப்படமும் கையில் இல்லை.

Bigil girl commitedReba John Boyfriend

 

View this post on Instagram

 

A post shared by Reba Monica John (@reba_john)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here