Bigg Boss Promo Editor

நாம் திரையில் கண்டு மகிழும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பின்னால் நூற்றுக்கணக்கான கலைஞர்களின் உழைப்பு அடங்கியுள்ளது. ஆனால் ரசிகர்கள் யாரும் அவர்களை அறிந்து கொள்வதில் பெரிதளவில் விரும்பும் காட்டிக்கொள்ளவில்லை ஆனால் ஒரு கலைஞரை மட்டும் பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆசைப்பட்டார்கள். அவர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ எடிட்டர்.

மக்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியானது வருடத்தில் மூன்று மாதங்கள் நடைபெறும். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உள்ள ரசிகர்களை விட அதன் ப்ரோமோவிற்கு உள்ள ரசிகர்கள் அதிகம் அதிலும் அவர் போடும் காதல் பிஜிம் களுக்கு பலரும் அடிமை.

அப்படி மூன்று சீசன்களை கடந்த நான்காம் சீசனிலும் காதலை பிஜிம் போட்டு பாலா மற்றும் ஷிவானியின் இடையில் காதல் சர்ச்சையை கிளப்பிய எடிட்டரின் புகைப்படத்தை பிக் பாஸ் பாலாஜி வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்பொழுது ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகின்றது.

மேலும் அந்த எடிட்டர் பாலாஜியிடம் தங்கள் வேலையை சுலபமாக்கி விட்டதாகவும் எங்களுக்கு ப்ரோமோ எடிட் செய்ய நிறைய கன்டென்ட் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதை பாலாஜி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ந்துள்ளார். தன்னை சர்ச்சையில் சிக்கவிட்டாலும் எதார்த்தமாக எடுத்துக்கொண்டு பழகும் பாலாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Bigg Boss Promo editor

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here