Vijay Sethupathi wife

எந்த வயதிலும் நம் வாழ்க்கை மாறக் கூடும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு நடிகர் விஜய் சேதுபதி. தன் இளம் வயது முதலே சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்கள் நடிக்கும் கூலித் தொழிலாளியாக தன் பயணத்தை தொடங்கிய விஜய் சேதுபதி தற்பொழுது மிகப் பெரிய ஸ்டாராக தமிழ் சினிமாவில் வளர்ந்து நிற்கின்றார்.

ஹீரோ காமெடியன் வில்லன் என அணைத்து கதாபாத்திரங்களுக்கும் பக்காவாக பொருந்தும் விஜய் சேதுபதி தன் எதார்த்தமான பேச்சு மற்றும் நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதிலும் அவர் சமீபத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் பவானி கதாபாத்திரம் அனைவரின் மனதையும் வென்றது. இவ்வளவு பெரும் புகழும் பெற்ற விஜய் சேதுபதி திருமணத்திற்கு பின்பு தான் சாதிக்க தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வெற்றிக்கு பின்னர் உறுதுணையாக இருக்கும் அவரது மனைவியின் புகைப்படத்தை இதுவரை பார்த்ததுண்டா?

Vijay Sethupathi

விஜய் சேதுபதி 2003-ம் ஆண்டு ஜெஸ்ஸி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின்னர் துபாயில் தான் பணிபுரியும் வேலையில் விருப்பமில்லாமல் இந்தியா திரும்பினார் அதன்பின் 2004 ம் ஆண்டு M. Kumaran s/o Mahalakshmi திரைப்படத்தில் கவனிக்கப்படாத கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கிய விஜய் சேதுபதிக்கு அதன் பின் கிடைத்ததெல்லாம் வெற்றி தான்.

பிஸ்சா, ரம்மி, சூது கவ்வும், நானும் ரவுடி தான் என பல வெற்றிப்படங்களை கொடுத்த விஜய் சேதுபதி தற்பொழுது 50 படங்களை கடந்து தயாரிப்புலும் கலக்கி வருகின்றார். மேலும், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாள மொழியிலும் ஒரு சில படங்களை விஜய் சேதுபதி தயாரித்து வருகின்றார்.

எத்தனை பாராட்டுகள் பெற்றாலும் கள்ளம் கவடம் இல்லாத விஜய் சேதுபதியின் குடும்ப புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. அந்த புகைப்படம் உங்கள் பார்வைக்காக! விஜய் சேதுபதி ஜெஸிஸி தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi Family Vijay Sethupathi Family Vijay Sethupathi Family

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here