80-களில் வெள்ளித் திரையில் பல வெற்றிகளை கண்டபின் 90யில் ராடன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி “சித்தி” என்ற நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நடிகை ராதிகா. நடிகர் சிவகுமாருடன் இணைந்து நடித்திருந்த இந்த தொடர் இல்லத்தரசிகள் பலரின் மனதையும் வென்றது. அதனைத் தொடர்ந்து அண்ணாமலை, அரசி, வாணி ராணி, செல்லமே, தாமரை, செல்வி என பல தொடர்களை தயாரித்து வெற்றிக்கண்ட ராதிகா மீண்டும் சித்தி பாகம் 2 வரப் போவதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.

சீரியலும் 2020-ம் ஆண்டு முதலில் தொடங்கிய நிலையில் சில மாதங்கள் கொரோனா தோற்றால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சித்தி-2 பற்றின பல விமர்சனங்கள் வந்த நிலையில் சித்தி-2 முடிவடையப் போவதாக வதந்திகள் வெளியாகின. அதை கவனித்த சித்தி-2 நடிகை மற்றும் தயாரிப்பாளரான ராதிகா சித்தி-2 தொடரும் என அறிவித்திருந்தார்.

Chithi 2

இந்நிலையில் ரசிகர்கள் எவரும் எதிர்பாராத வகையில் ராதிகா சரத்குமார் சித்தி 2 நாடகத்திலிருந்து விலகப் போவதாக அதிகாரப் பூர்வமாக தன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்கள் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தன் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து இயங்கும் என அறிவித்துள்ள ராதிகா சித்தி 2 தொடரில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் ராதிகா தொடரை விட்டு விலகியதற்கு காரணம் அவர் அரசியலில் இரங்கப் போவது தான் என்ற செய்தி ரசிகர்களின் மத்தியில் பரவலாக பேசப் பட்டு வருகின்றது. முழு நேரம் அரசியலில் ஈடுபட்டு வரும் ராதிகாவின் கணவர் சரத்குமாருடன் ராதிகா சமீபத்தில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொழுது விரைவில் முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here