நடிகை ரம்பா அவர்கள் ராஜேந்திர பிரசாத்துடன் ஆ ஒக்கட்டி அடக்கு (1992) என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதே ஆண்டில், இவர் வினீத்துடன் சர்கம் என்ற மலையாள திரைப்படத்தில் பணியாற்றினார், இதற்காக அவர் மாநில விருதைப் பெற்றார், மேலும் அந்த படம் தேசிய விருதைப் பெற்றது. இதுவரை, அவர் 100 தென்னிந்திய திரைப்படங்களிலும்,17 இந்தி படங்களிலும், 3 பெங்காலி படங்களிலும் (சிட்டா, தாதா மற்றும் ரெஃப்யூஜி) நடித்துள்ளார்.Rambha
ஜல்லாத், ஜுர்மானா, தன்வீர், ஜங், கத்தார், ஜுட்வா, சஜ்னா, கர்வாலி பஹர்வாலி, பந்தன், குரோத் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் இதயங்களை வென்றுள்ளார். விஜய், கோவிந்தா, அர்ஜுன் சர்ஜா, அஜய் தேவ்கன், சுனில் ஷெட்டி, அக்ஷய் குமார், அனில் கபூர், சல்மான் கான், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தயாரிப்பாளராக அவரது வாழ்க்கை அவரது சகோதரரின் உதவியுடன் “த்ரீ ரோஸஸ்” திரைப்படத்துடன் தொடங்கியது.Actress rambha
அவர் ஜோதிகா மற்றும் லைலாவுடன் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.அவரது இரண்டாவது தமிழ் திரைப்படமான உள்ளத்தை அள்ளித்தா என்பது அவரது மிகப்பெரிய வெற்றியாகும். கபடி கபடி மற்றும் பாயும் புலி கணிசமான புகழ் பெற்றது.1997ஆம் ஆண்டு வெளியான கமர்ஷியல் படம், அருணாச்சலம். இந்த படத்தில் ரஜினிகாந்த் (Rajinikanth Arunachalam) ஹீரோவாக நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக மறைந்த நடிகை சௌந்தர்யா நடித்திருந்தார்.

Actress rambha

நடிகை ரம்பா, இதில் முக்கிய கதாப்பாத்திரமாக வருவார். இந்த படத்தில் நடித்த போது, ரஜினி தன்னிடம் விளையாட்டாக ப்ராங்க் செய்த சம்பவத்தை ரம்பா பகிர்ந்துள்ளார்.ரஜினிகாந்த்-ரம்பா அருணாச்சலம் படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்தனர்.இந்த படப்பிடிப்பின் போது நடந்த சம்பவத்தை ரம்பா பகிர்ந்துள்ளார்.ரஜினி குறித்து பேசிய விஷயங்கள் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.சல்மான் கான் ஒரு முறை அருணாச்சலம் படத்தின் படப்பிடிப்பிற்கு ரஜினிகாந்தை காண வந்துள்ளார்.

Actress rambha

அப்போது அவரை வரவேற்ற ரம்பா, ஓடிச்சென்று கட்டிப்பிடித்துள்ளார். இதை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த ரஜினி, ரம்பாவிடம் “எங்க கிட்ட மட்டும் குட் மார்னிங் சார்..என்று சொல்ற..அவங்க வந்தா மட்டும் ஓடி போய் கட்டிப்பிடிக்கிற..இனிமே யூனிட்ல யார் வந்தாலும் அவங்கள இப்படித்தான் வரவேற்கனும்” என்று குறும்பாக கலாய்த்துள்ளார். இதை நினைவு கூர்ந்த ரம்பா, “அவர் இப்படித்தான் செல்லமாக குறும்பு செய்வார்” என்று கூறியுள்ளார்.

Actress rambha

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here