நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் தொலைக்காட்சி திரைப்பட காமெடியன்களுக்கும் சரி மீம்ஸ் போட்டு நமது மன அழுத்தத்தை குறைக்கும் நெட்டிசன்களுக்கும் சரி அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் தினமும் பல பிரச்சனைகளை சந்தித்து தான் வருகின்றனர். அந்த வகையில் நம்ம வெளியில் சிரிக்க வைத்து மனதினுள் புழுங்கி கொண்டிருந்த ஜி பி முத்து நேற்று தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் உடங்குடி பஞ்சாயத்தை சேர்ந்த ஜி பி முத்து அவரது ஊரிலேயே சிறிய மரக்கடை தொழில் ஒன்றை நடத்தி வருகிறார். முதலில் தனது சந்தோஷத்திற்காக மற்ற பெண்களுடன் டிக் டாக்கில் டூயட் போட்டு வந்த ஜி பி முத்து. தனது கவடத்த நடிப்பு மற்றும் பேச்சுகளை வைத்து நெட்டிசன்களின் மத்தியில் பிரபலமானார். டபுள் மீனிங்கில் கலாய்த்து தள்ளினாலும் அதை வேடிக்கையாக மட்டும் எடுத்துக்கொள்ளும் ஜி பி முத்து இதுவரை ரசிகர்களை சிரிக்க வைப்பதில் குறை வைத்ததே இல்லை.
சமீபத்தில் டிக் டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டதால் சில நாட்கள் காணாமல் போயிருந்த ஜி பி முத்து திரும்பவும் இன்ஸ்டகிராம் அறிமுகப்படுத்திய ரீல்ஸ் மூலம் கம் பேக் கொடுத்து அசைத்தி வருகிறார். யூடூப்பிலும் பல பேட்டியில் பங்குபெற்று வரும் ஜி பி முத்து நேற்று காலை மன உளைச்சலால் விசத்தை அருந்தினர்.
இதைக்கண்டு அவரை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். குடும்ப பிரச்சனைகளால் ஜி பி முத்து தற்கொலை செய்திருக்கலாம் என ரசிகர்களால் பேசப்பட்டு வருகின்றது. இவர் கடைசியாக வெளியிட்ட காணொளியில் இவருக்கு குடும்ப பிரச்சனைகள் இருப்பதாகவும் அதனால் தான் வாழவே பிடிக்க வில்லை என்று மன வருத்தத்துடன் பேசியுள்ளார். அந்த வீடியோ கீழ்க்கண்டவற்றில். அவருக்கு ௪ குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் செய்த செயலில் எதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் அந்த குழந்தைகளின் நிலை?
அதனால் அவர் மட்டுமின்றி எவராயினும் இது போன்ற முட்டாள் தனமான செயல்களை செய்யவே கூடாது. பிரச்சனைகள் யாருக்கு தான் இல்லை, அதற்கு தற்கொலை தீர்வாகாது!!
View this post on Instagram