Vadivelu vs Yogi Babu

பொழுதுபோக்கை எண்ணி திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து அனுப்புவதில் என்றுமே குறை வைக்காதவர் வைகைப் புயல் வடிவேலு. ஒவ்வொரு திரைப்படத்திலும் நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் கதாபாத்திரங்கள் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வேடமிட்டு நம்மை சிரிக்க வைக்கும் வடிவேலு இதுவரை எண்ணிக்கற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1990 மற்றும் 2000 களில் காமெடி என்றாலே வடிவேலு மாட்டும் தான் என்ற சூழலை ஏற்படுத்தி இருந்த நிலையில் அரசியல் பேசிய வடிவேலுவை மற்ற கட்சியினர் பட வாய்ப்புகள் கிடைக்காத வகையில் முடக்கினார். அதிலிருந்து மீள நினைக்கும் வடிவேலுவிற்கு இதுவரை ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும்.

Vadivelu in Vetri kodi kattu

இவருக்கு தடுமாற்றம் ஏற்பட்ட நிலையில் சந்தானம் சூரி சதிஷ் யோகி பாபு போன்ற மற்ற காமெடி நடிகர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதனை பயன்படுத்திய இவர்கள் தான் தற்பொழுது பட காமெடிகளில் அசதி வருகின்றனர். அதிலும் யோகி பாபு தற்பொழுது உச்சத்தில் இருக்கிறார் என்றே கூற வேண்டும். முதலில் கவனிக்கப்படாத சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த யோகி பாபு தன கடின உழைப்பினால் காமெடி நடிகனாக மாறி தற்பொழுது கதாநாயகனாக கலக்கி வருகிறார்.

வைகைப்புயல் வடிவேலு அவர்கள் ஏற்கனவே கம்-பேக் கொடுக்க போவதாக தெரிவித்திருந்த நிலையில் “பேய் மாமா” என்ற திரைப்படம் மூலம் மீண்டும் சினிமாக்குள் வரப்போகிறார் என்று பரவலாக பேசப்பட்டது. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், எதிர்பார்த்த படி பட பிடிப்பு முடிந்து அதன் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஆனால், அதில் அதிர்ச்சி என்னவென்றால் வடிவேலு கதாநாயகனாக இருக்கும் இடத்தில யோகி பாபு உள்ளார். இதை பற்றி விசாரித்தபொழுது “வடிவேலு அவர்கள் சில சொந்த காரணங்களுக்காக படத்தை விட்டு விலகியதாகவும் அதனால் யோகி பாபுவை தேர்ந்தெடுத்தாகவும்” தெரிவித்துள்ளார்.

Yogi Babu

காமெடி மன்னன் வடிவேலுவின் கம் பேக் திரைப்படம் இப்படியே தள்ளி தள்ளி போவது ரசிகர்களின் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தபடியான கம் பேக் திரைப்படமாக தற்பொழுது இரண்டாம் புலிகேசி திரைப்படம் உள்ளது அந்த திரைப்படமும் இன்னும் படப்பிடிப்பு வேலைகளை ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது தாமதமானது மற்ற காமெடி நடிகர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அமைகிறது. அவரகளது வளச்சியை பற்றி சந்தோச படுவதா இல்லை இவரது தடங்களை பற்றி வேதனை படுவதா என்று ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர். பேய் மாமா திரைப்படத்தின் பஸ்ட் லுக் இதோ!

Yogi Babu Next movie

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here