பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியானது மூன்று சீசன்களை கடந்த தற்பொழுது நான்காவது சீசன் தொடங்கி உள்ளது. வழக்கம்போல் ௧௬ போட்டியாளர்களை கொண்டு தொடங்கி உள்ள இந்த சீனில் ரியோ நிஷா ரேகா அனிதா சம்பத் ரம்யா பாண்டியன் போன்ற பல பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். பொதுவாக மற்ற சீசன்களில் ஓரிரு வாரங்களுக்கு பின்பே மனஸ்தாபம் ஏற்படும் ஆனால் இந்த முறை இரண்டாவது நாளிலேயே ஆரம்பித்துள்ளது.

அந்த சண்டையானது சுரேஷ் சக்கரவர்த்திக்கும் தொகுப்பாளர் அனிதா சம்பத்திற்கும் தான். இப்படி ஒரு பக்கம் சண்டை சச்சரவுமாக இருக்கும் நிலையில் மறுபக்கம் பிக் பாஸ் போட்டியாளர்கள் இருவரின் மனதிற்குள் பூக்கள் பூத்து வருகின்றது. இந்த சீசனில் 8 ஆண் போட்டியாளர்களும் 8 பெண் போட்டியாளர்களும் உள்ளனர். இதில் 4 பெண்களும் 3 ஆண்களும் திருமணமாகதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss Kamal

மற்ற சீசன்களை வைத்து பார்க்கும் பொழுது இந்த சீசனிலும் கண்டிப்பாக காதல் ஜோடியை பார்க்கலாம் அந்த வகையில் அந்த இருவர் யார் என்று ரசிகர்கள் கணித்து வந்த நிலையில் தற்பொழுது யார் என்று அப்பட்டமாக தெரிந்துள்ளது. அவர்கள் யார் என்றால் பாலாஜியும் ஷிவானி நாராயணனும் தான்.

சில எப்பிசோடுகளாக இவர்கள் செய்யும் நடவடிக்கையால் ஒருவேளை இருவரும் காதலிக்காரர்களா என்ற சந்தேகம் ரசிகர்களின் மத்தியில் எழுந்த நிலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகாத குறும்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றது. அதில் கவின் லொஸ்லியா எப்பொழுதும் உக்காந்திற்கும் ஸ்பாட்டில் சுரேஷ் சக்கரவர்த்தி பற்றி முனுமுனுப்பார்கள். சில கபி-ரைட் பிரச்சனைகளால் அந்த வீடியோவை பதிவிட இயலவில்லை.

Balaji Shivani

அது மட்டுமின்றி ஷிவானி மற்ற போட்டியாளர்களோட சரியாய் ஒட்டாத நிலையில் பாலாஜி உடன் மட்டும் பேச விரும்புகிறார். நண்பர்களாக பழகினாலும் இனி வரும் காலங்களில் இருவரும் பிரச்சனைகளை சந்திக்கும் பொழுது வேதனைகள் காதலாக மாறலாம் என்று எதிர்ப்பார்க்க படுகிறது. அப்படி ஏற்பட்டால் இவர்கள் தான் அடுத்த கவின் லொஸ்லியா. உண்மை கவினும் லொஸ்லியாவும் பிக் பாஸ் வீட்டின் வெளியில் சென்று தங்கள் காதலை முரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here