எத்தனை வருடங்கள் ஆனாலும் ஒரு சில கதாபாத்திரங்கள் மட்டுமே நமது மனதில் பதிந்திருக்கும். அப்படி சூரிய நடித்த ஆறு திரைப்படத்தில் இடம் பெற்ற சவுண்ட் சரோஜா கதாபாத்திரம் என்றும் மறக்காத ஒன்று அதிலும் அவர் பேசும் ஒரு வார்த்தை வேற லெவல் தான். அப்படி சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் துணிந்து நடித்த ஐஸ்வர்யா தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

80 மற்றும் 90 களில் தமிழ் தெலுங்கு மலையாளம் என தென் இந்திய மொழிகளில் கதாநாயகியாக நடித்து வந்த ஐஸ்வர்யா பாஸ்கரன் அவர்கள் சில மசாலா பாடல்களிலும் தோற்றமளித்தது உண்டு. இந்திய சினிமாவில் நல்ல மார்க்கெட்டை வைத்திருந்த ஐஸ்வர்யா பாஸ்கரன் அவர்களுக்கு திருமணத்திற்கு பின்னர் பட வாய்ப்புகள் சரிந்தது.

Aishwarya Baskaran

அதன் பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் ஐஸ்வர்யா தற்பொழுதும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு தன்வீர் என்பவருடன் 1994-ம் ஆண்டு திருமணமாகி 1996-ம் ஆண்டு விவாகரத்து ஆன நிலையில் 1995-யில் பிறந்த தனது 25 வயது மகளை இவர் தான் வளர்த்து வருகிறார். இவர் கடைசியாக தமிழில் தோன்றிய திரைப்படம் 2018-ம் ஆண்டு வெளியான “சாமி 2” திரைப்படம் தான்.

திரைப்படங்களிலும் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காத ஐஸ்வர்யா பாஸ்கரன் அவர்கள் தற்பொழுது சமையல் யூடூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் அவருக்கு தெரிந்த சமையல் குறிப்புகளை பகிர்ந்து வருகிறார். 49 வயதாகும் இவர் தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் பரவி வருகின்றது. இதை பார்த்த சில ரசிகர்கள் வருணித்தும் சில ரசிகர்கள் இந்த வயதில் இதெல்லாம் தேவையா? என்றும் விமசித்து வருகின்றனர்.

Aishwarya Baskaran Aishwarya Baskaran

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here