காமெடியரசன் வடிவேலுவுக்கு முன்னரே தமிழ் சினிமாவில் அறிமுகமான செந்தில் அவர்கள் காமெடி ஜாம்பவான் கவுண்டமணியுடன் இணைத்து பல திரைப்படங்களில் கலக்கியுள்ளார். அதிலும் ராமராஜ் நடித்த கரகாட்டன் திரைப்படத்தில் இடம்பெறும் வாழைப்பழ காமெடி அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. 20 ஆண்டுகளுக்கும் மேலாக காமெடியனாக நடித்த செந்தில் வயதின் முதிர்ச்சி காரணமாக 2000-ற்கு பிறகு ஓரிரு படங்களிலேயே நடித்து வந்தார்.
அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக தன் மார்க்கெட்டையும் இழந்த செந்தில் அவர்கள் 2010-ற்கு மிகவும் கம்மியாகவே சினிமாவில் தோன்றிவருகிறார். அதனால் மீடியா மற்றும் ரசிகர்களின் கண்ணில் படாத செந்தில் அவர்கள் தற்பொழுது ஆளே மாறி போய் தாடி மீசைன்னு வேற மத்தியான லுக்கில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது!
தன் தந்தை திட்டியதால் ஊரை விட்டு ஓடி வந்து மதுபான கடையில் வேலை பார்த்து வந்த செந்தில் கலைத்திறனை கற்றுக்கொண்டு 1979-ம் ஆண்டு “ஒரு கோயில் இரு தீபங்கள்” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதின் பின் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துவந்த செந்தில் படிப்படியாக முன்னேறி ஒரு காலகட்டத்தில் அசைக்க முடியாத காமெடியனாக தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தார்.
காலத்திற்கேற்ப செந்தில் மவுசு குறைந்ததால் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சினிமாவில் இருந்து தோற்றத்தை குறைத்த செந்தில் 2019- ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராசாத்தி என்ற நெடுந்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின் இவர் எந்த ஒரு படங்கள் அல்லது நிகழ்ச்சியில் தோன்றவில்லை. தற்பொழுது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ஒரு வேலை அவரது அடுத்த படத்திற்கான கேட்-அப் பா என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் 2019-ம் ஆண்டு வெளியான பிஸ்தா என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வெளியிட்ட புகைப்படங்கள் கீழ்கண்டவற்றில்!!