பிக் பாஸ் தமிழ் சீசன் 4 யில் பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ள நிலையில் 80 களில் தலைச்சிறந்த நடிகையான ரேகா அவர்களும் இந்த சீனில் பங்கேற்றிருந்தார். அவர் பங்கேற்க போகிறார் என்ற செய்திகள் நிலவிய பொழுதிலிருந்தே அவரை பற்றின உண்மைகள் சமூக ஊடங்கங்களில் பரவி வந்த நிலையில், தற்பொழுது அவரது மகள் அனுஷாவின் புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகின்றது.
1970-ம் ஆண்டு அலப்புழா கேரளாவில் வரதராஜா என்பவருக்கு மகளாக பிறந்த ரேகா 1986-ம் ஆண்டு சாத்தியராஜுடன் கடலோர கவிதைகள் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் ரஜினி கமல் என பல பிரபலங்களுடன் தமிழ் சினிமாவில் நடித்து தனக்கென்ன தனி இடத்தை பிடித்தார். இவர் புன்னகை மன்னன், எங்க ஊரு பாட்டுக்காரன், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, குணா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
16 வயதில் சினிமாவிற்கு வந்த ரேகா பத்து ஆண்டுகள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா என பல மொழிகளில் எக்கச்சக்கமான படம் நடித்த ரேகா திருமணத்திற்கு பின்னர் திரைப்படத்தில் தோன்றுவதை முற்றிலுமாக நிறுத்தி விட்டார். இவர் 1996 ம் ஆண்டு கடல் வகை உணவுகளை ஏற்றுமதி செய்யும் தொழிலை செய்து வரும் ஜார்ஜ் ஹாரிஸ் என்பவரை மணந்தார். திருமணத்திற்கு பின்பு ஒரு குழந்தையை பெற்றெடுத்து வளர்த்த பின்னரே சினிமாவில் மீண்டும் கம் பேக் கொடுத்தார் ஆனால் இம்முறை துணை கதாபாத்திரங்களில்.
அதன் பின்பும் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரேகா அவர்களுக்கு பிரபல தொலைக்காட்சி நிகழிச்சியான பிக் பாஸ் தமிழில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்து. அதில் பங்கேற்று விளையாடிய ரேகா இரண்டாம் வாரத்திலேயே எதிர்பாராத விதமாக வெளியேறினார். அவர் உள்ளே இருக்கும் பொழுது சகா போட்டியாளரான ஷிவானியை தன் மகள் போலவே இருக்கிறாய் என அடிக்கடி தெரிவித்து வந்தார். ஆனால் ரேகாவின் உண்மை மகளை பலரும் பார்த்திருக்க மாட்டார்கள். ஆதலால் இப்பதிவில் ரேகாவின் உண்மை மகள் புகைப்படங்களை இணைத்துளோம்.
ரேகாவின் மகள் அனுஷாவின் புகைப்படங்கள் போன வருடமே இணைய தளத்தில் வெளியாகி சீக்கிரமே திரைப்படத்தில் தோன்ற போகிறார் என்ற வதந்தி பரவி வந்தது. ஆனால் ரேகா அதற்கு அவள் படிப்பில் தன் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறாள் அதனால் அவளுக்கு சினிமாவில் இப்பொழுது நடிக்க விருப்பமில்லை தன் படிப்பை முடித்த பின்னர் பாக்கலாம் என்று கூறி வதந்திகளை உடைத்து விட்டார்.
ரேகா சிறு வயதிலேயே நடிக்க வந்த பொழுது கமல் வலுக்கட்டாயமாக தன்னை முத்தமிட்டார் என்ற செய்தியை வெளியிட்ட ரேகா தன் மகளுக்கும் அந்த நிலை ஏற்பட வேண்டாம் என்று கூட தன் மகளை சினிமாவிற்கு அனுப்ப மறுத்திருக்கலாம் என ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது. அனுஷாவின் சில புகைப்படங்கள்!!