இளைய தளபதி விஜய்யின் அம்மா ஷோபா செய்திருக்கும் ரீல்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக நடிகர் விஜய் அவர்கள் திகழ்ந்து வருகிறார். அவருக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தளபதி விஜய் 90-களில் ஹீரோவாகி, பின்னர் வளர்ந்து வரும் நடிகர், உச்ச நடிகர் என படிப்படியாக உயர்ந்து இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் என்ற இடத்தை பிடித்துள்ளார். மேலும் இன்று இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் தளபதி விஜய் இருக்கிறார்.இளைய தளபதியாக இருந்த தளபதி விஜய் தற்போது தளபதியாக மாறி கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். மேலும் தளபதி விஜய் படம் என்றால் கட்டாயம் 100 கோடி வசூலை அசால்ட்டாக கடக்கும் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.தளபதி விஜய் குடும்பத்தினர் பற்றி நிச்சயம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவரின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் பிரபல இயக்குனர், தாய் ஷோபா பின்னணி பாடகியாக இருந்தவர்.
நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். அவரது சம்பளம் 150 கோடிக்கும் மேல் சென்றுவிட்டது. இருப்பினும் எஸ்ஏ சந்திரசேகர் 78 வயதிலும் சின்னத்திரை சீரியலில் நடித்து வருகிறார். அம்மா ஷோபாவும் அடிக்கடி மீடியாவில் பேட்டி கொடுத்து வருகிறார்.இந்நிலையில் தற்போது நடிகர் விஜய்யின் அம்மா (Shoba Chandrasekhar) செய்திருக்கும் ரீல்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த ரீல்ஸ் வீடியோ சமீபத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் செய்த “So beautiful , so elegant, just looking like a WOW” ஆகும். ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கும் ரீல்ஸ் வீடியோவில் தான் அவர் இருக்கிறார்.
இந்த ரீல்ஸ் வீடியோ ஷோபா அவர்கள் சோனியா விக்ரம் என்பவருடன் இணைந்து எடுத்துள்ளார். தற்பொழுது அந்த வீடியோ இணையத்தில் மிகவும் வைரலாக அது பரவி வருகிறது. தளபதியின் ரசிகர்களும் அதை கொண்டாடி வருகின்றனர்.
ஷோபா அவர்கள் தமிழ் நாடு அரசு இசை கல்லூரியில் இணைந்து படித்து பட்டம் பெற்றவர். பாடகி ஷோபா வீணை இசை கருவியை வாசிப்பதில் முறையான பயிற்சி பெற்றவர் ஆவார். பல மேடைகளில் அவர் பாடல்களை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.