தமிழ் திரைப்படம் மற்றும் சீரியல் நடிகையான விஜி சந்திரசேகர் அவர்கள் தமிழ் மட்டுமின்றி மலையாளம் தெலுகு கன்னடா என தென் இந்திய மொழிகளில் அதிகம் தோன்றியவர். கே பாலச்சந்தர் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தில்லு முள்ளு திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக அறிமுகமானார் விஜி சந்திரசேகர். விஜி அவர்களின் தங்கை சரிதா தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நட்சத்திரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் சினிமாவில் அதிகம் உடன்பாடு காட்டாது படிப்பில் கவனம் செலுத்தி வந்த விஜி தில்லு முள்ளு திரைப்படத்தில் அறிமுகமானத்திற்கு பின்னர் ௧௦ ஆண்டுகள் கழித்து அடுத்தடுத்து தெலுங்கு மலையாளம் கன்னடம் மொழிகளில் டேபுட் செய்தார். பாரதி ராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த கிழக்கு சீமையிலே திரைப்படம் மூலம் மீண்டு தமிழுக்கு வந்த விஜி அதன் பின் நடித்த படங்கள் அணைத்து அவருக்கு வெற்றிப்பாதையை வகுத்தது.
ஒருபக்கம் திரைப்படம் என்றால் மறுபக்கம் சீரியலிலும் பல ஆண்டுகளாக நடித்து வரும் விஜி அவர்கள் 1995-ம் ஆண்டு சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்து செட்டில் ஆனார். இத்தம்பதியினருக்கு தற்பொழுது சுரக்சா லவ்லின் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். விஜி அவர்களின் மூத்த மகள் சுரக்சா தன் படிப்பை முடித்து மருத்துவராக பணியாற்றி வருகிறார். தன் இன்றாவது மகள் லவ்லின் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
ஹவுஸ் ஓனர், மருதா போன்ற படங்களில் நடித்துள்ள விஜி அவர்களின் இரண்டாவது மகள் லவ்லின் சந்திரசேகர் இன்னும் எதிர்பார்த்த அளவு தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இருப்பினும் லவ்லின் சந்திரசேகர் தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. யாருடா இது என ரசிகர்கள் பலரும் இவரைப் பற்றின விவரங்களை சேகரித்த பொழுது இவர் வின்டேஜ் நடிகை விஜியின் மகள் என்பதை அறிந்துள்ளனர். நடிகை விஜியின் இரண்டாவது மகள் லவ்லின் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!