சாதாரணமாக நமது வீட்டில் ஏதாவது தேடும் பொழுது கூட ஒரு பொருள் இருந்து அதற்கு தேவையான மற்றொரு பொருள் இல்லையென்றால் நமது நாக்கு நுனியில் வரும் பழமொழி தான் “நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.” இதை அவ்வளவு சுலபமாக பயன்படுத்தும் நாம் அதன் ஆன்மீக பின்னணி பற்றி என்றாவது ஆராய்ந்தது உண்ட? சாதாரண மனிதர்களான நாம் அதை ஒரு விளையாட்டு வார்த்தையாக நினைத்து கொள்கிறோம் ஆனால் அதன் ஆன்மீகம் அர்த்தம் உங்கள் அறிவுக்காக
சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவரான பைரவர் திரிசூலத்தை ஆயுதமாகவும் நாயை வாகனமாகவும் கொண்டவர். அதனால் பெரும்பாலான பைரவர் கோவில்களில் நாய்க்கு சிலைகள் வைத்திருப்பர். அந்த சிற்பத்தை இதுவரை கவனித்திருப்பார்கள் என்று கூட தெரியவில்லை.
அத்தகைய சிற்பத்தை நீங்க கலை உணர்வுகள் கொண்டு பார்த்தால் அதில் செதுக்கப்பட்டிருக்கும் பைரவரின் வாகனமான நாய் தெரியுமா அதை தவிர்த்து வெறுமணமாக பார்த்தால் நாய் மட்டுமே தெரியுமாம். அதனால் தான் நம் முன்னோர்கள் “நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கல்லைக் கண்டால் நாயைக் காணோம்” என்ற பழமொழியை வகுத்துள்ளனர்.
இப்பழமொழியை வேடிக்கையாக பயன்படுத்துவதிலும் தவறொன்றுமில்லை ஆனால் பழமொழி கூறும் முன் அதன் அர்த்தத்தை புரிந்து சொல்வது மிகச்சிறந்தது. வாய்யில்லாத ஜீவனான நன்றி உள்ள நாயை கல்லை கொண்டு அடிப்பது மிக பெரிய தவறு பாவம் என்பது குறிப்பிடத்தக்கது.