Ajith First Crush

சினிமா திரையுலகை பொறுத்தவரை தங்கள் துறை நடிகர் நடிகைகளை திருமணம் செய்து கொள்வதே அரிதான ஒன்று. அப்படி திருமணம் செய்து கொண்டவர்களில் ஒருவரான அஜித் மற்றும் ஷாலினி தங்கள் திருமண வாழ்க்கையை ஒருவர் ஒருவர் அனுசரித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். காதல் திருமணம் செய்து கொண்ட அஜித்திற்கு ஷாலினி அவர்கள் முதல் காதலி இல்லை என்று கூறியுள்ளார்.

௫௦ ற்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் அஜித் என் வீடு என் கணவர் என்ற திரைப்படத்தில் 1990-ம் ஆண்டு சிறு கதாபாத்திரத்தில் தோன்றினார். அதன் பின் காதல் கோட்டை அவள் வறுவலை காதல் மன்னன் போன்ற திரைப்படங்களின் மூலம் பெண்களின் கனவுக்கு கண்ணனாக திகழ்ந்த அஜித் குமார் ரமேஷ் கண்ணா இயக்கத்தில் 1999-ம் ஆண்டு வெளியான தொடரும் திரைப்படத்தில் இரண்டு நடிகைகள் நடித்தனர்.

Ajith Shalini

தேவயானி மற்றும் ஹீரா நடித்திருந்த இந்த திரைப்படத்தில் தல அஜித் அவர்களுக்கு ஹீரா மேல் காதல் இருந்ததாக பழைய தமிழ் பட வில்லன் பயில்வான் தெரிவித்துள்ளார். மேலும் அஜித் நடிகை ஹீரா அவர்களுக்கு பல முறை காதல் கடிதம் எழுதி இருப்பதாகவும் ஆனால் சில பிரச்சனைகளால் அந்த காதல் கூடவில்லை என்று கூறியுள்ளார்.

அதன் பின் நடிகர் அஜித் ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டது நம் அனைவர்க்கும் அறிந்தவவையே. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் பலரும் அஜித் ஒருவேளை ஹீராவை காதலித்திருந்தாலும் ஷாலினி போன்ற அளவிற்கு ஜோடி பொருத்தம் வந்திருக்காது என தெரிவித்து வருகின்றனர். அஜித் ஷாலினிக்கு ஒரு மகளும் மகனும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Heera Rajagopal Heera Rajagopal

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here