தமிழ் சினிமாவில் தற்பொழுது உயர்ந்து வரும் நடிகை மஹிமா நம்பியார். கேரளத்தில் பிறந்த இவர் தமிழ் சினிமாவில் சாட்டை என்ற சமூக விழிப்புணர்வு திரைப்படம் மூலம் 2012- ம் ஆண்டு தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். பார்க்க செம ஹோம்லியாக நடித்திருந்த மஹிமா நம்பியார் தற்பொழுது வெளியிட்டுள்ள மாடர்ன் புகைப்படங்கள் ரசிகர்கள் வாயில் விரலை வைக்கும்படி அமைந்துள்ளது.
1994-யில் பிறந்த இவர் தனது 15 வயதில் “காரியஸ்தன்” என்ற மலையாள திரைப்படத்தில் ஹீரோவின் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினர். விளம்பரங்களில் மாடலாகவும் தோன்றிய மஹிமா தமிழ் பட இயக்குனர் சாமியால் 2010- ம் ஆண்டு வெளியான சிந்து “சமவெளி” என்ற திரைப்படத்திற்கு அழைக்கப்பட்டார். சில சொந்த காரணங்களுக்காக அதை மறுத்த மஹிமா 2 வருடங்கள் கழித்து “சாட்டை” திரைப்படத்தில் நடித்தார்.


அதன் பின் என்னமோ நடக்குது புரியாத புதிர் மஸ்டெர்பிஸ் இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட 10-ற்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள மஹிமா நம்பியார் தற்பொழுது வளந்து வரும் கதாநாயகியாக திகழ்கிறார். இவருக்கு இந்த 2020-யில் இதுவரை தமிழ் படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லா என்பது வருத்தத்துக்குரியது. பலரும் இவர் பிரபல தமிழ் பட வில்லன் நம்பியார் அவர்களின் பேத்தி என்று நினைக்கின்றனர் ஆனால் அது உண்மை அல்ல.
மஹிமா நம்பியார் அவர்களை நாம் பெரும்பாலான படங்களில் ஹோம்லி கேரக்டர்களிலே பார்த்த நிலையில் அவர் தற்பொழுது வெளியிட்டுள்ள மாடர்ன் புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் ஹோம்லி கதாபாத்திரங்கள் மட்டுமின்றி மாடர்னாகவும் நடிக்க முடியும் என்று இந்த போட்டோஷூட் மூலம் நிரூபித்துள்ளார். அவர் வெளியிட்ட புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!


