பிக் பாஸ் தமிழ் போலவே பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகின்றது. தென் இந்திய மொழியான தெலுங்குவிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்று சீசன்கள் தொடர் வெற்றிக்கு பின்னர் நான்காவது சீசன் தொடங்கியுள்ளது. பிக் பாஸ் தமிழ் சீசன் 4-ற்கு முன்னரே தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்பொழுது 5 வாரங்களை கடந்து 6-வது வாரத்தில் உள்ளது.
செப்டம்பர் மாதம் 6-ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் தெலுங்கு சீசன் 4-யில், அவ்வப்பொழுது தமிழில் தோன்றிய பிரபலங்கள் உட்பட தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். அந்த வரிசையில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த “சிகரம் தோடு” திரைப்படத்தில் நடித்த மோனல் காஜ்ஜரும் பங்கேற்றுள்ளார். 6 வாரங்களாக தாக்கு பிடித்து வரும் மோனல், தற்பொழுது பிக் பாஸ் வீட்டினுள் கவர்ச்சி மங்கையாக திகழ்கிறார்.
குஜராத் மாநிலத்தில் பிறந்த மோனல் காஜர் சுடிகாடு என்று தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமானார் அதன் பின் தமிழ் மலையாளம் ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்த மோனல் வாய்ப்புகள் குறைந்த காரணத்தால் தன் சொந்த மொழியான குஜராத்தி படங்களில் நடிக்க தொடங்கினர். மீண்டும் தெலுங்கு வில் கம் பேக் கொடுக்க நினைக்கும் மோனல் தற்பொழுது பிக் பாஸ்ஸில் பங்கேற்றுள்ளார்.
அக்கினேனி நாகார்ஜூனா தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி 19 போட்டியாளர்களை கொண்டு தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள மோனல் மூன்று நாமினேஷன் பிராசஸ்ஸில் இருந்து மக்களால் காப்பாற்றப்பட்டு நான்காவது நாமினேஷன் பிராசஸ்ஸிற்கு தேர்வாகியுள்ளார். இந்நிலையில் அக்கினேனியுடன் போட்டியாளர்கள் பங்கேற்கும் கலந்துரையாடலில் மோனல் மிகவும் கிளைமராக தோற்றமளித்திருந்தார். இதை கவனித்த ரசிகர்கள் பலரும் இந்த ஆடையை பற்றி விமர்சித்து வருகின்றனர். மேலும் இது ஒரு சர்ச்சையாக உருவாகி அவரை வீட்டை விட்டு வெளியேற்ற மக்கள் மோனலுக்கு எதிராக வாக்களிக்கவும் வாய்ப்புள்ளது.
கவர்ச்சி என்பது தற்பொழுது இந்தியாவில் வழக்கம் ஆனாலும் குடும்பங்களுடன் இணைத்து குழந்தை முதல் பெரியவர்கள் வரை பார்ப்பதனால் இப்படி கவர்ச்சி காமிப்பது கொஞ்சம் சங்கடத்தை ஏற்படுத்துகிறது.