Muthaiya Muralidharan Biopic

நடிகர் விஜய் சேதுபதியை பற்றி பெரிய அளவில் அறிமுகம் தேவையில்லை. பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் உழைத்து கவனிக்கப்படாத கதாபாத்திரத்தில் இருந்து கதாநாயகனாக மாறியவர். தன் எதார்த்தமான பேச்சு மற்றும் நடிப்பை வைத்து ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் திருப்பினார். வருடத்திற்கு 5 திரைப்படங்களாவது நடித்து வெளியிடும் விஜய் சேதுபதி அவர்கள் இதுவரை 50 திரைப்படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தென்மேற்கு பருவக்காற்று, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரவுடி தான், சேதுபதி, தர்ம துரை, விக்ரம் வேத, 96 போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதிக்கு இந்த ஆண்டு 2020-யில் மட்டும் 13 திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. அதில் பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறும் ஒன்று.

800 First Look

800 என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த திரைப்படம் மூலம் தான் அவருக்கு பிரச்சனை எழுந்துள்ளது. எம் எஸ் ஸ்ரீபதி இயக்கத்தில் முவி ட்ரெயின் தயாரிப்பில் படம் பிடிக்கவுள்ள இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த செய்தி ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில் அதற்கான பஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது.

அந்த பஸ்ட் லுக்கானது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் அதற்கான எதிர்ப்ப்புகள் தான் அதிகமாகி வருகின்றது. அந்த பஸ்ட் லுக்கில் விஜய் சேதுபதி இலங்கையின் கோடி பதித்த ஆடையை அணிந்திருப்பது பலரின் கண்களையும் உறுத்துகிறது. தமிழ் மக்களை மதிக்காமல் சரமாரியாக சுட்டுத்தள்ளிய இலங்கை நாட்டின் கொடியினை அணிந்ததால் தான் ரசிகர்களுக்கு இவ்வளவு கோபம்.

அதனால் சினிமா ரசிகர்கள் உண்மையான தமிழன் ஒருவன் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டான் அதனால் அந்த கொடியை நீக்கிவிட்டு நடிக்கும் படி விஜய் சேதுபதியிடம் கோரிக்கை விடுகின்றனர். அதையும் தாண்டி நடித்தால் அந்த திரைப்படம் புறக்கணிக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்துகின்றனர்.

இதனை பற்றி ரசிகர்கள் பலரும் எதிர்ப்புகள் தெரிவித்து வரும் நிலையில் படக்குழுவினரிடமிருந்து எந்த விதமான பதிலும் வெளிவர வில்லை. இத்திரைப்படம் வெளிவந்தால் இலங்கையில் முடங்கிக் கிடக்கும் தமிழ் மக்கள் பலருக்கும் ஒரு தைரியத்தை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இலங்கை கொடிகளை நீங்கி நடிக்க ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

800 Movie Poster

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here