பிக் பாஸ் தமிழ் சீசன் 4 தொடங்கி ஒரு வாரம் முடிந்த நிலையில் அதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் பலருக்கும் எதிர்பார்த்தபடி ஆர்மி உருவாகிக் கொண்டிருக்கிறது. ரம்யா பாண்டியன் அனிதா சம்பத் சனம் ஷெட்டி பெற்றவர்களுக்கு ஏற்கனவே குறிப்பிடும் அளவில் ரசிகர்கள் கொண்ட நிலையில் புதிதாக மக்களுக்கு அறிமுகமாகும் சம்யுக்தவுக்கும் தற்பொழுது பேன் ஆர்மி உருவாகிக் கொண்டு வருகின்றது.
இவர் இன்னும் ஹவுஸ் மேட்ஸ் உடன் சகஜமாக பழகவில்லை என்றாலும் இவரது அமைதி மற்றும் பொறுமையான குணம் வெளியில் உள்ள ரசிகர்கள் பலருக்கும் பிடித்திருக்கின்றது. அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் “கடந்து வந்த பாதைகள்” டாஸ்க்கின் பொழுது சொன்னபடி தன் கல்லூரி பருவம் முதலே மாடலிங்கில் ஈடுபட்டு வரும் சம்யுக்த பல போராட்டங்களுக்கு பின் ஒரு திறமை வாய்ந்த மாடலாக மாறியுள்ளார்.
காதலித்து திருமணம் செய்த இவரை பாதிலேயே கழட்டி வீட்டா கணவரை பிரிந்து தற்பொழுது தனது நான்கு வயது மகனை ஒற்றை பெற்றோராக வளத்தி வருகின்றேன் என்று அவர் கூறியது பலரையும் தாக்கியது. அதுமட்டுமின்றி, கடந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 4 யில் அனைவரும் வெறுக்கப்பட்ட முகமான மீரா மிதுனை சூப்பர் மாடல் என்று கூறி கலாய்த்தது ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இவருக்கு இப்படி ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகி வரும் நிலையில் சம்யுக்தவின் புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ரம்யா பாண்டியன் அனிதா சம்பத் போன்றவர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் அழகாய் தெரிந்திருந்தாலும் அவர்கள் பிக் பாஸ் வீட்டினுள் சுமாராகத் தான் இருக்கின்றனர். அனால் இவர் உள்ளேயும் சரி வெளியவும் சரி தனக்கென தனி அழகை கொண்டு நமது கண்களை கவருகிறார். இவர் வெளியில் செல்ல கூடாதென்று ரசிகர்கள் பலரும் எண்ணுகின்றனர். அவரது சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக