தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான பாடகராக திகழ்ந்து வருபவர் ஹரிஷ் ராகவேந்திரா.இவர் பாடகர் மட்டுமல்லாமல் நடிகரும் ஆவர்.தேவதையை கண்டேன்,சக்கரை நிலவே,மெல்லினமே மெல்லினமே என பல சூப்பர் ஹிட் பாடல்களை இவர் பாடி இருக்கிறார்.மேலும் 2006 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான திருப்பதி படத்தில் அஜித்திற்கு அன்னான் வேடத்தில் நடித்து இருப்பார்.ஹரிஷ் அவர்கள் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி என பல மொழிகளில் பாடி இருக்கிறார்.
இவருடைய இசை திறமைக்கு மாநில அரசு விருதுகளும் கிடைத்து இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் ஹரிஷ் ராகவேந்திரா அவர்கள் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.அதில் அவர் தன்னுடைய திரை பயணம் குறித்து கூறி இருந்தது.இந்த மியூசிக் பீல்ட் க்கு வந்த புதிதில் இளையராஜா சாருக்கு இரண்டு வரிகளாவது பாடி கட்ட வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தது.
இதற்காக நான் பல மாதங்கள் காத்து இருந்தேன்.அதற்கு பிறகு தான் அவரிடம் இருந்து வாய்ஸ் டெஸ்ட்டிற்காக எனக்கு அழைப்பு வந்தது.முதன் முறையாக அவரை பார்த்த பிறகு பிரம்மித்து போனேன்.இதனால் எனக்குள் நடுக்கம் வந்து வாய்ஸ் டெஸ்டில் சரியாக பாடினேனோ என்று கூட தெரியவில்லை.நான் சொல்லி அனுப்புகிறேன் என்று சொல்லி விட்டார்.நல்ல வாய்ப்பு மிஸ் பண்ணி விட்டேன் என வருத்தப்பட்டார்.
அதோடு அவர் என்னை கூப்பிட வாய்ப்பில்லை என்று நினைத்தேன்.பின்னர் அவரிடம் இருந்து எனக்கு மறுபடியும் அழைப்பு வந்தது.சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர் ரெகார்டிங் செய்யவில்லை.இரண்டாவது முறையும் எனக்கு ஏமாற்றம் கிடைத்தது.பின் மறுபடியும் சில மாதங்கள் கழித்து அவரிடம் இருந்து அழைப்பு வந்தது.
பாரதி படத்தில் வரும் நிற்பதுமே நடப்பதுமே என்ற பாடல் சிறப்பாக ரெகார்டிங் சிறப்பாக முடிந்தது.அதே போல் நடிகர் கவண்டமணி அவர்களும் அவமானம் படவில்லை என்றால் பெரிய வெற்றிகள் கிடைக்காது என்று சொல்லி இருக்கிறார்.அதே போல் தன்னிடமும் செல்லாமல் போன செக் நிறைய இருக்கிறது.கலைஞருக்கு இது மாதிரியான ஏமாற்றங்கள் தவிர்க்க முடியாத ஒன்று.மாறிப்போன நிலைமையால் பலருடைய வாழ்க்கையில் பொருளாதார சிரமங்கள் ஏற்பட்டு இருக்கிறது.
வாழ்க்கையில் நிறைய நேரத்தில் தடுமாறி நின்றாலும் வழிகளை மறக்க தவறான பழக்க வழக்கங்களை கையாண்டாலும் வாழ்கை தடம் மாறிவிடும்.அதற்கு மாறாக வடிவேல் சார் சொன்ன மாறி திரிஷா இல்லைனா நயன்தாரா என்ற காமெடி இலக்கை கெட்டியாக பிடித்து ஓட வேண்டும் .அப்படி தான் இப்போது வரைக்கும் நான் ஓடிக்கொண்டு இருக்கிறேன்.