நடிகை நக்மாவை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.ஒரு காலத்தில் கவர்ச்சி குயினாக சினிமாவில் வளம் வந்தவர் அவர்.ரஜினி,சத்யராஜ்,கார்த்திக் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார்.

1994 ஆம் ஆண்டு காதலன் திரைப்படத்தில் அறிமுகமானார்.பிறகு பாட்ஷா,ரகசிய போலீஸ்,வில்லதி வில்லன், லவ் பேர்ட்ஸ் போன்று பல படங்களில் நடித்துள்ளார்.இவர் தெலுங்கு,ஹிந்தி,மலையாளம்,கன்னடம்,போஜ்புரி,மராத்தி என பல மொழிகளில் நடித்துள்ளார்.

சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த பிறகு அரசியலில் குதித்து அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறார். நக்மாவிற்கு 49 வயது ஆகிய நிலையில் தற்போது வரை திருமணம் செய்யாமல் தான் இருக்கிறார்.அவர் பேசிய விஷயம் வைரலாகி வருகிறது.

எனக்கு திருமணம்,குழந்தை என வாழ ஆசை தான்,நடக்கிறதா என்று பார்க்கலாம் என அவர் தெரிவித்து இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here