குழந்தைப் பருவம் முதலே சினிமாவில் தோன்றி வரும் நடிகை ப்ரவீனா வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையில் அதிகம் தோன்றுபவர். 1992 முதல் மலையாள சினிமாவில் மட்டும் நடித்து வந்த பிரவீன் 24 வருடங்களுக்கு பின் 2016 ம் ஆண்டு சசிக்குமார் நடித்த “வெற்றிவேல்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரமாக அறிமுகமானார்.
அதன்பின் வினோத் இயக்கிய “தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தில் கார்த்திக் அம்மாவாக நடித்த ப்ரவீனா தொடர்ந்து பல தமிழ் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தோன்றியுள்ளார். 2019 ம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த “கோமாளி” திரைப்படம் தான் அவர் கடைசியாக தமிழில் நடித்த திரைப்படம். 2020 ம் பீஷ்ம என்ற திரைப்படம் மூலம் தெலுங்கு சினிமாவிலும் ப்ரவீனா டேபுட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளித்திரைக்கு முன்னரே தமிழ் சின்னத் திரையில் அறிமுகமான ப்ரவீனா 2008 ம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நம்ம குடும்பம் என்ற சீரியல் மூலம் பிரபலமானார். அதன் பின் மஹாராணி ஆதி பராசக்தி போன்ற தொடர்களில் நடித்த ப்ரவீனாவிற்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ப்ரியமானவள் என்ற நெடுந்தொடர் பெரும் புகழை கொடுத்தது.
அதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியலில் ஆல்யா மானசாவிற்கு மாமியாராக நடித்து வரும் ப்ரவீனாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகி வருகின்றனர். அத்துடன் ப்ரவீனா தன் மகளின் பிறந்தநாளையொட்டி சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள் நடிகையை மிஞ்சும் பேரழகு என வருணித்து வருகின்றனர். அப்புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!