தொலைக்காட்சி ரசிகர்கள் பலரின் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்து வருபவர் ஷிவாங்கி. இசைக் குடும்பமான கிருஷ்ணகுமார் மற்றும் ஸ்ரீமதி பின்னி தம்பதியினருக்கு 2000-ம் ஆண்டு கேரளா மாநிலத்தில் பிறந்த ஷிவாங்கி 2019-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் ௭ என்ற பாடல் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானார்.

பாடுவது மட்டுமின்றி தன் கிச் கிச் குரல் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்த ஷிவாங்கி எதிர்பாரத விதமாக செமி பைனலில் வெளியேற்றப்பட்டார். அதன் பின் அதே விஜய் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கப்பட்ட சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷிவாங்கி தன் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகின்றார்.

Sivaangi Krishnakumar

சீசன் 1-த் தொடர்ந்து சீசன்-2 விலும் பங்கேற்றுள்ள ஷிவாங்கி போட்டியாளரான அஸ்வினுடன் சேர்ந்து செய்யும் அட்டகாசம் வேற லெவல். பலருக்கும் பிடித்து போன ஷிவாங்கி சின்னத்திரையை விட்டு வெள்ளித் திரைக்கு எப்பொழுது நடிக்க வருவார் என்று பலரும் எதிர் பார்த்திருந்த நிலையில் அந்த தருணம் தற்பொழுது நிறைவேறியுள்ளது.

பாடகரான ஷிவாங்கி சிவகார்த்திகேயன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியாக இருக்கும் டான் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. மேலும் அத்திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, முனிஸ்கான், பால சரவணன், காலி வெங்கட், சூரி, சமுத்திரக்கனி, எஸ் ஜே சூரியா போன்ற பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் திரைப்படங்களில் காமெடிக்கு பஞ்சமில்லாத நிலையில் தற்சமயம் சிவாங்கியும் அந்தக் கூட்டணியில் சேர்ந்துள்ளது ரசிகர்களுக்கு வேற லெவல் காம்போவாக தென்படுகின்றது. இத்திரைப்படத்தை அட்லீயின் துணை இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயற்றயுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sivaangi First movie

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here