விகடன் டாக்கீஸ் தயாரிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா மற்றும் அனுயா பாகுவாட் நடிப்பில் வெளிவந்த காமெடி காதல் திரைப்படம் “சிவா மனசுல சக்தி” பலரின் மனதையும் வென்றது. ஊர்வசி சந்தானம் மற்றும் சினேகா முரளி துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஜீவாவின் தங்கச்சி கதாபாத்திரத்தில் நடித்த சினேகா முரளி திரைப்படத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தம் அதற்குபின் எந்த ஒரு திரைப்படங்களிலும் தென்படவே இல்லை.
நீண்ட நாளாக விலகி இருக்கும் சினேகா முரளியின் புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. நடிப்பதை முதலும் முடுவுமாக சிவா மனசுல சக்தி திரைப்படம் மூலம் முடித்த சினேகா முரளி அவர்கள் தற்பொழுது இசையில் ஆர்வம் கொண்டு இசையமைப்பாளராக மாறி வருகினறார். அதுமட்டுமின்றி பார்ப்பதற்கு ஆள் அடையாளமே தெரியாதது போல் மாறி உள்ளார்.
சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் கண்ணாடி போட்டுகொண்டு மேக் அப் இல்லாம ஒல்லியாக 2009 யில் தோன்றி இருந்த சினேகா முரளி தற்பொழுது சராசரியான உடலை கொண்டு கண்ணாடிகளை கழட்டி மேக் அப்-களை அதிகரித்து பார்ப்பதற்கு தற்பொழுது சினிமா நடிகை போல் தோற்றமளிக்கிறார்.
இவர் தொடர்ந்து இது போல் புகைப்படங்களை வெளியிட்டால் இவருக்கென தனி ஆர்மி சீக்கிரமே தமிழ் ரசிகர்கள் உருவாக்குவார்கள் என்பது உறுதி. இவர் தற்பொழுது அமெரிக்காவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவது குடிப்பிடித்தக்கது.