இவருக்கு நிகர் எவரும் இல்லை என்றே வரிகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டு திரு எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள். இந்த 50 ஆண்டு சினிமா பயணத்தில் எஸ் பி பி அவர்களின் குரலுக்கு ஈடாக எவரும் பாடவில்லை என்றே கூற வேண்டும். இளைய ராஜா முதல் அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜா வரை அனைவரிடமும் பணியாற்றியுள்ள எஸ் பி பி இது வரை பாடிய பாடல்கள் ஏராளம்.
“அடிமைப் பெண்” திரைப்படத்தில் “ஆயிரம் நிலவே வா” பாடல் முதல் கடைசியில் பாடி வெளிவந்த “தர்பார்” திரைப்பட பாடல் “சும்மா கிழி” பாடல் வரை அவர் பாடியது அனைத்தும் வெற்றி தான். குரல் மன்னம் எஸ் பி பி இதுவரை ௪௦௦௦௦ பாடல்கள் இதுவரை ௧௬ மொழிகளில் பாடியுள்ளார். அதில் அவர் தமிழில் பாடிய ௩௦ சிறந்து பாடல்களை பட்டியலிட்டுளோம். இதில் உங்களுக்கு பிடித்தமான பாடல்கள் இடம்பெறவில்லை என்றால் மறக்காமல் அதை பதிவிடவும். அனைவர்க்கும் பயனாக இருக்கும்
1.உலகம் சுற்றும் வாலிபன் – அவள் ஒரு நவரச நாடகம்
2.ராகங்கள் பதினாறு – ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
3.நினைத்தாலே இனிக்கும் – எங்கேயும் எப்போதும்
4.காதல் ஓவியம் – சங்கீத ஜாதி முல்லை
5.தம்பிக்கு எந்த ஊரு – காதலின் தீபம் ஒன்று
6.வறுமையின் நிறம் சிவப்பு – சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
7.பொன்னுமணி – நெஞ்சுக்குள்ளே இன்னார் என்று சொன்னால் புரியுமா
8.அபூர்வ சகோதரர்கள் – உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்
9.அபூர்வ சகோதரர்கள் – ராஜா கைய வச்ச அது ராங்கா போனதிலே
10. சகலகலா வல்லவன் – இளமை இதோ இதோ
11.புது புது அர்த்தங்கள் – கல்யாண மலை கொண்டாடும் பெண்ணே
12.பயணங்கள் முடிவதில்லை – இளைய நிலா பொழிகிறதே
13.நிழல்கள் – இது ஒரு பொன் மாலை பொழுது
14.தளபதி – காட்டுக்குள்ள மனசுக்குள்ள
15.மௌன ராகம் – நிலாவே வா செல்லாதே வா
16.நிழல்கள் – மடை திறந்து பாயும் நதி அலை நான்
17.மௌன ராகம் – மன்றம் வந்த தென்றலுக்கு
18.தளபதி –ராக்கம்மா கைய கட்டு
19.தளபதி – சுந்தரி கண்ணால் ஒரு சேதி
20.முள்ளும் மலரும் – ராமன் ஆண்டாளும்
21.சலங்கை ஒளி – தகிட ததிமி தகிட ததிமி
22.சத்யா – வலையோசை கல கலவென
23.கேளடி கண்மணி – மண்ணில் இந்த காதலின்றி
24.ரோஜா – காதல் ரோஜாவே
25.டூயட் – அஞ்சலி அஞ்சலி
26.டூயட் – மெட்டு போடு
27.டூயட் – என் காதலே
28.மின்சார கனவு – தங்க தாமரை மகளே
29.முத்து – ஒருவன் ஒருவன் முதலாளி
30.படையப்பா – வெற்றி கொடிகட்டி
இந்த 30 பாடல்களை தவிர இன்னும் ஏராளமான பாட்டு எஸ் பி பி அவர்களின் குரலில் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றது இன்னும் ௧௦௦௦ ஆண்டுகள் ஆனாலும் ஒலிக்கும் என்பது உறுதி. இப்படி பட்ட பாடல்களை தந்த அணைத்து கலைஞர்களுக்கும் நன்றி. என்றும் எஸ் பி பி நினைவுடன்!