tamil language Special

கல் தோன்றி மண் தோன்றிய நாள் முதலே தோன்றிய மும்மொழி எமது தமிழ் மொழி. தமிழ் மற்றும் தமிழரின் பெருமையை பற்றி பேச ஆரம்பித்தால் பேசிக்கொண்டே இருக்கலாம். அத்தகைய செம்மொழியான இந்த தமிழ் மொழியில் யாரும் இதுவரை அறிந்திடாத மற்றொரு பெருமையை பற்றி இந்த பதிவினில் பார்ப்போம்.

12 உயிர் எழுத்து 18 மெய்யெழுத்து 216 உயிர் மெய் எழுத்து 1 ஆயுத எழுத்து ஆகா மொத்தம் 247 எழுத்துக்களை கொண்ட இந்த மூத்த மொழியில் மூன்று லட்சத்திற்கும் மேல் வார்த்தைகள் உள்ளன. தமிழ் மொழியை அடிவேராக கொண்டு பேசப்படும் இதர மொழிகளும் உண்டு. ஆயிரம் மொழிவந்தாலும் தமிழில் உள்ள வளத்தை போல் வராது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலம் ஹிந்தி போன்ற மக்களை இணைக்கும் பொது மொழிகள் இருப்பினும் அது மக்களின் உணர்ச்சி வார்த்தைகளுடன் ஒருபொழுதும் இணையாது ஆனால் தமிழ் மொழியில் உள்ள எழுத்துகள் மக்களின் உணர்ச்சிகளோடு பக்காவாக பொருந்துகிறது. அதற்கான சான்று கீழ்கண்டவற்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

உணர்வுஎழுத்து
வலிஅ, ஆ
சிரிப்புஇ, ஈ
காரம்உ, ஊ
கோபம் எ, ஏ
வெட்கம்
ஆச்சரியம்ஒ, ஓ
வக்கனை
விக்கல்

இது போல் நமது உணச்சிகளுக்கு உயிர் ஊட்டுவதால் என்னமோ இந்த 12 எழுத்துக்களுக்கும் உயிர் எழுத்து என பிரித்துள்ளனர். இது போன்ற சிறப்பு எந்த மொழிலாவது உண்ட? ஆதலால் இதைப் பற்றி எங்கள் கருத்து என்னவென்றால் நம் புலப்புக்காக மூன்று மொழி நான்கு மொழி கற்றுக்கொண்டாலும் தவறில்லை ஆனால் என்றும் தாய்ப்பாலுடன் இணைத்து வரும் தமிழை மட்டும் என்றும் அழிய விடக்கூடாது. இதுவே தமிழராய் பிறந்த ஒவ்வொருவரின் நமது கடமை. வாழ்க தமிழ்!! வளர்க்க தமிழ்!!

1 COMMENT

  1. தமிழ் மொழி மிகச்சிறந்த இனிமையான மொழி என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் எனக்கு சிறு குறையும் உண்டு. தென்னிந்திய மொழிகளில் தமிழைத்தவிர மற்ற மொழிகளில் ஒவ்வொரு உச்சரிப்புக்கும் ஒரு வேறுபட்ட எழுத்துக்கள் உண்டு. தமிழில் மட்டும்தான் இரண்டு வேறுபட்ட உச்சரிப்புக்கு ஒரே எழுத்தை பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக தவறு, தண்டனை, கவலை, கம்பீரம், படகு, பம்பரம், டவுன், டாடி போன்றவற்றில் எழுத்துக்கள் ஒன்றே. உச்சரிப்புக்கள் வேறு. இந்தியிலும் மற்ற முக்கிய இந்திய மொழிகளிலும் ஒவ்வொரு உச்சரிப்புக்கும் வேறுபட்ட எழுத்துக்கள் உண்டு. அந்நிய மொழி உச்சரிப்பை நாம் பயன்படுத்தக்கூடாது என்பதெல்லாம் சும்மா. உச்சரிப்பு என்பது எல்லா மொழிகளுக்கும் சொந்தமானது. தமிழ் அறிஞர்கள் ஆராய்ந்து இதற்கு சரியான தீர்வு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here