கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருவது சினிமா ரசிகர்களுக்கு அனைவருக்கு அறிந்தவையே. இவர்கள் அதிகரபூர்வமாக காதலிக்கும் செய்தியை வெளியிட்ட பொழுதிலும் என் இன்னமும் திருமணம் செய்யாமல் காதல் புறக்கலாகவே சுற்றி திரிகின்றனர் என்று பலரும் கேள்வி எழுப்பினர். இதனை பற்றி விக்னேஷ் சிவனிடம் விசாரித்த பொழுது அவர் கூறிய காரணம் கீழ் பத்தியில்!!
சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி நேர்காணலில் விக்னேஷ் சிவன் கூறியவை “சமூக வலைத்தளங்களை பொறுத்த வரை நாங்க இதுவரை 22 முறை திருமணம் செய்துள்ளோம், 3 மாதத்திற்கு ஒரு முறை நாங்கள் திருமணம் செய்துகொண்டதாக செய்திகளை பரப்பி வருகின்றனர்” என நக்கலிடத்தார்.
“ஆனால், உண்மையில் எங்களுக்குள் இன்னும் திருமணம் நடை பெறவில்லை. எனக்கும் சரி நயத்தரவிற்கும் சரி சில இலட்சியங்கள் மற்றும் சாதிக்கும் வெறி மனதினுள் உள்ளது. இப்பொழுது ஜோடியாக சுற்றி திரிந்தாலும் எங்களின் இலட்சியங்கள் நிறைவேறிய பின்னரே திருமணம் செய்து கொள்வோம்! அது வரை எங்களுக்குள் திருமணம் நோ” என்று கூறியுள்ளார்.
நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், அண்ணாத்தே, காத்துவக்குல ரெண்டு காதல் போன்ற படங்களில் நடித்து வரும் 36 வயதான நயன்தாரா தன் நடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் படி நேஷனல் அவார்ட் வாங்கிய பின்னரே விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொள்வராம். அந்த ஒரு தருணத்திற்காக 35 வயதாகும் விக்னேஷ் சிவன் கையில் தாலியுடன் காத்து கொண்டிருக்கிறார்.
பல திறமையான நடிகைகள் மத்தியில் நயன்தாராவும் போட்டியிட்டு நேஷனல் அவார்ட் பெறுவது கொஞ்சம் கடினம் தான் இருப்பினும் அந்த சவாலை ஏற்று கொண்டு அதை நோக்கி பயணம் செய்கிறார் நயன்தாரா. ஒரு வேலை அதை தவற விட்டால் விக்னேஷ் சிவனுக்கு பெரிய செக் தான். நடிகை நயன்தாரா ஏற்கனவே பிரபு தேவா சிம்பு ஆகிய சினிமா பிரபலங்களை காதலித்து திருமணம் செய்யாமல் பிரிந்தது குறிப்பிடத்தக்கது. மேட் பார் இச்அதராக (made for each other) திகழும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் ரசிகர்களுக்கும் சந்தோசம் தான்.
நயன்தாராவை சீக்கிரமே கல்யாண கோலத்தில் பார்க்க நாமும் காத்திருப்போம்!!