என்னதான் ஷாருகான் அவர்கள் பாலிவுட் நடிகராக இருந்தாலும் அவருக்கு தமிழ் சினிமாவிலும் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு உள்ளது. ரா ஒன் சென்னை எக்ஸ்பிரஸ் ஹே ராம் உயிரே உள்ளிட்ட படங்களில் நடித்த ஷாருகான் அவர்களுக்கு ஒரு மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. பார்க்க அழகாக தோற்றமளிக்கும் இவரையும் பாலிவுட் திரையுலகம் பழித்து வருகின்றதாம். இதனை பற்றின முழு விவரம் கீழே!!
தனது பள்ளி படிப்பை முடித்து குறும்படங்களில் நடித்து வரும் ஷாருகான் மகள் சுஹானா தன் 12 வயது முதலே அவரது மாநிற தோற்றத்தால் பலராலும் தாழ்மை படுத்தப்படுவதாக குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். ஷாருகான் மகள் தென் இந்திய ரசிகர்கள் பலருக்கும் அறியாத நிலையில் ஐ பி எல் போட்டிகள் மூலம் தென் இந்திய ரசிர்கர்களுக்கு பெரிதும் அறிமுகமானார்.
அதன் வாயிலாக சினிமாவிற்கு வருவதற்கு முன்னே
சமூக வலைத்தளங்களில் ரசிகர் படையை அதிகப்படுத்திய சுஹானா தற்பொழுது சமூக பிரச்சனைக்காக குரல் எழுப்பியுள்ளார். இதைப் பற்றி அவர் கூறுகையில் “தற்பொழுது நமது நாட்டில் நடந்து வரும் பல பிரச்சனைகளில் தீர்க்க வேண்டியவைகளில் இதும் ஒன்று! இது என்னைப் பற்றியது மட்டுமல்ல, எந்தவொரு காரணமும் இல்லாமல் தங்கள் தோற்றத்தை வைத்து தாழ்ந்த உணர்வுடன் வளர்ந்த ஒவ்வொரு இளம் பெண்/பையனைப் பற்றியது. எனது தோற்றத்தைப் பற்றியும் என்னில் மூத்தவர்கள் பலரும் பழித்துள்ளனர்.
“எனது 12 வயது முதலே கருப்பு நிறத்தை காரணம் காட்டி நான் அழகாக இல்லை என்று பலரும் குறை கூறி இருக்கின்றனர். இந்தியர்கள், இந்திய நிறத்தில் இல்லாமல் எந்த நிறத்தில் இருக்க வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. நீங்கள் இப்படி வெளி தோற்றத்தை வைத்து மற்றவர்களை மதிப்பிடுவது மிகவும் வலிக்கின்றது எப்படி இருந்தாலும் நாம் இந்தியர்கள் அதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.”
5″7 அடி வெள்ளை நிறத்தில் இருந்தால் தான் அழகு என்று உங்கள் குடும்பத்தினர், சமூக வலைத்தளங்கள் எல்லாம் உங்கள் மனதில் விச விதையை விதைச்சிருக்கலாம். ஆனால் நான் 5″3 மற்றும் அடி மாநிறம் தான் நான் எனக்கு அதுவே போதுமானது. நீங்களும் அப்படி நினைத்தால் தான் வெளித்தோற்றத்தினால் தாழ்த்த பட்ட மக்கள் முன்னேற முடியும்” என்று பதிவிட்டுள்ளார்